வேளை வந்தது Phoenix, Arizona, USA 51-0415E 1சமீபத்தில் ஒரு முடமான பாதத்தைக் கொண்டிருந்த அவளுடைய சிறு குழந்தைக்காக அவள் அந்தக் கைக்குட்டைகளில் ஒன்றை அவளுடைய சகோதரியிடம் அனுப்பியிருந்தாள். மேலும் அந்தப் பெண்ணிடம் அவள் கூறினாள்; அவள், “அந்தக் கைக்குட்டையை அதனுடைய பாதத்தின் மீது நீ கட்டு, கர்த்தர் அதை குணமாக்கப்போகிறார்” என்றாள். எனவே அவள் ஏறக்குறைய இரண்டு வாரங்கள் அந்தக் கைக்குட்டையை கட்டியிந்தாள், அது மிகவும் அழுக்கானதாள். மேலும் அவள், “அதை நீ துவைத்து, பிறகு அதன் மீது திரும்பவும் கட்டு” என்றாள். எனவே அதை அவள் செய்தாள், அந்த கைக்குட்டையானது ஒரு வகையாக பழசாகி கிழிந்து போனது. குழந்தையின் பாதத்தில் வித்தியாசம் காணப்படவில்லை. அவள், “நான் அதை வெளியே எடுக்கலாமா என்று ஊகிக்கிறேன்” என்று கூறினாள். மேலும் அவள், “ஓ, நீ அதைச் செய்யாதே” என்று கூறினாள். “அது துண்டுகளாக ஆகுமானால், நீ கயிறுகளால் அதைக் கட்டி, பிறகு திரும்பவும் அங்கே அதன் மீது கட்டு” என்றாள். அவள், “ஏனெனில் அது சுகமடையும் என்று நான் அறிகிறேன்” என்றாள். அனேக காரியங்கள் கூட்டங்களில் செய்யப்பட்டதை அவள் கண்டிருக்கிறாள். 2அந்த ஸ்திரியானவள் அதைச் செய்தாள்-அல்லது, அவள் அப்படியே ஒரு சில கயிறுகளைக் கொண்டு அந்தக்கைக்குட்டையை அந்தக் குழந்தையின் பாதத்தின் மீது கட்டினான். ஒரு நாள் காலை, அவள் அந்தக் குழந்தைக்கு ஏதாவது சம்பவிக்க வேண்டுமென்று சென்றாள், கர்த்தர் அந்த இரவில் அங்கே இருந்தார். அந்த குழந்தையின் பாதம் (foot) நேரானது. அவள் காட்டும்படி அந்தக் குழந்தையை கூட்டத்திற்கு கொண்டு வந்திருந்தாள், கைக்குட்டையில் விடப்பட்டிருந்த கயிறுகளைக் கொண்டு வந்திருந்தாள், அதன் தற்போதைய படத்தையும் (சுகமடைவதற்கு முன்புள்ள குழந்தையின் படத்தையும் கொண்டிருந்தாள், அந்த சிறு குழந்தையின் கால் அதைப் போன்று எப்படியாக முடமாகி இருந்தது, சுமார் எட்டு அல்லது பத்து மாதங்கள் வயதுடைய சிறு குழந்தை, அங்கே சிறு குழந்தையின் கால் அப்படியே மற்ற எந்த குழந்தையைப் போலவும் இயல்பாக இருக்கிறது. இப்பொழுது, அவள் அந்தக் கைக்குட்டையை அப்படியே வெளியே எறிந்து... என்று கூறியிருந்தால் என்னவாகியிருக்கும். நல்லது, அங்கே தான் ஆசீர்வாதங்களை நாம் தவற விட்டு விடுகிறோம். நாம் அப்படியே சிறிது தேவன் பேரில் காத்திருக்க பயப்படுகிறோம். பாருங்கள், பாருங்கள்? “காத்திருக்க மாத்திரம் செய். நான் மீண்டும் அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்கிறேன். காத்திருக்க மாத்திரம் செய். அதற்கு அதிக காலமில்லை. இப்பொழுது கூட பிதாவின் கரம் பரிந்து பேசிக் கொண்டுதானிருக்கிறது. சீக்கிரத்தில் நாம் வெற்றியின் பாடலை இயேசுவுடன் பாடிடுவோம்” என்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது சரியே. அப்படியே தேவன் பேரில் காத்திருங்கள். அதை விசுவாசித்து, அதை அறிக்கை பண்ணி, அதனுடன் தரித்திருங்கள்; தேவன் அதை உங்களுக்காக சம்பவிக்கப் பண்ணுவார். 3நான் உங்களுக்கு அனுப்புவதற்கோ, எழுதுவதற்கோ, என்னால் முடிகிற எதையும் செய்வதற்கோ நான் மகிழ்ச்சியுள்ள வனாயிருக்கிறேன். மேலும் நீங்கள் எப்பொழுதாவது என்னிடம் ஒரு தனிப்பட்ட கடிதத்தைக் கொண்டிருக்க விரும்புவீர்களானால், அப்படியே அதன் மீது, “தனிப்பட்ட (personal)' என்று எழுதிவிடுங்கள், என்னுடைய செயலாளர் அதை திறக்கக்கூட மாட்டார். நான் வீட்டை அடைவது வரை அவர் காத்திருப்பார் அல்லது நான் இருக்கும் இடத்திற்கு என்னிடம் அதை அனுப்பி விடுவார். நான் உங்களுக்கு ஏதாவது உதவிச் செய்யக்கூடுமானால், நான் மகிழ்ச்சியாயிருப்பேன். இப்பொழுது, அது மதசம்பந்தமான கருத்து தொடர்பான ஏதாவது இருக்குமானால், நீங்கள் உங்களுடைய மேய்ப்பரிடம் கேட்குமாறு நான் கூறுகிறேன், ஏனெனில் நான் - நான் அதைச் செய்ய விரும்பவில்லை (பாருங்கள்?), ஏனெனில் நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவே இங்கே வெளியே இருக்கிறேன். நீங்கள் உங்களுடைய உள்ளூர் மேய்ப்பர் மற்றும் அதைப் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். மற்றபடி நான் அங்கே ஏதாவது உதவி செய்யக்கூடுமானால், நான் அதைச் செய்வதற்கு மகிழ்ச்சியுள்ளவனாயிருப்பேன். 4இப்பொழுது, அறிய வேண்டிய ஒவ்வொன்றையும் நான் கூறிவிட்டேன் என்று நான் நம்புகிறேன், நீங்கள் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் அன்புள்ள ஜனங்களாகிய உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும் இப்பொழுது, தேவன் உங்களுடனே கூட இருப்பாராக. நான் அப்படியே சில வேதவசனங்களை சிறிது வாசிக்க விரும்புகிறேன், அதன் பிறகு நாம் ஜெபவரிசையைத் தொடங்கப் போகிறோம்,...?... எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பரலோக பிதாவானவர் மிக அதிகமாகவும் அபரிமிதமாகவும் செய்யும்படி நாம் எதிர்பார்க்கப் போகிறோம், இல்லையா? இன்றிரவு செய்யும்படி நாம் அவரிடம் விரும்புவது என்னவென்றால், மகத்தானதைச் செய்யும்படியும், நடக்க முடியாத காரியங்களைச்செய்யும்படியும், இந்த எல்லா வியாதிப்பட்ட ஜனங்களைச் சுகமாக்கும்படியும் தான். மேலும் இன்றிரவு எனக்காக இதைச் செய்யும்படி நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இது ஒரு கடின முயற்சி தேவைப்படுகிற நேரமாகவும் மகத்தான எதிர்பார்த்தல்களாகவும் உள்ளது. மேலும் அன்புள்ள கிறிஸ்தவ நண்பர்களே, என்னுடைய முழு இருதயத்திலிருந்து, நான் - நான் அப்படியே என்னால் முடிகிற கடினமானதை முயற்சித்தேன். இரவுக்குப்பின் இரவாக இந்த சக்கர நாற்காலிகளின் மீதாக நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அங்கே அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாத்திரமே சுகமடைந்திருந்தனர். நான் கவனித்தேன். நான் வழக்கமாக, அவர்களுடைய வியாதிகளைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு சக்கர நாற்காலியின் மீது இருக்காத யாரோ ஒருவரை நான் அழைக்க முயற்சிக்கிறேன், ஏனெனில் ஒரு சக்கர நாற்காலியில் இருக்கும் அந்த மனிதரை பார்க்கக்கூடிய எவரும் அவர்களுடன் என்ன கோளாறு என்பதை அறிவர். அது ஒரு பரம ரகசியமல்ல. ஆனால் நான் அந்த மனிதரிடம் சிறிது பேசி, பிறகு அவர்களைக் கவனிக்கிற ஒவ்வொரு தடவையும், அவர்களுடைய கோளாறு என்னவென்று நான் காண்கிறேன். ஆனால் அப்போது அவர்கள் சுகமடைந்து விட்டதாக கூறுவதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது. நான்நான் உண்மையை சொல்லவில்லையென்றால் தேவன் என்னை கனப்படுத்த மாட்டார். நீங்கள் பாருங்கள்? மேலும் அவர்கள் சுகமடைய மாட்டார்கள். அவர்கள் சுகமடைந்துவிட்டதாக நான் காணும் போது, பிறகு நான் அதைக் கூறுகிறேன். 5இங்கே அவதிப்படும் ஜனங்களாகிய உங்களெல்லாரையும் நான் விரும்புகிறேன்.... அநேகமாக கீல்வாத நோயுடனும் எல்லாம் வளைந்ததாயும் கட்டுகளுடனும் ஜனங்கள் இங்கே கட்டில்கள் மீதும் நோயாளிகளை எடுத்துச் செல்வதற்கான தூக்குப் படுக்கைகளிலும் (stretchers) கிடக்கின்றனர். மேலும் அவர்களில் சிலர் இங்கே இருக்கைகளில் கிடக்கின்றனர், மேலும் ஜனங்கள் இங்கே கோல்களிலும் முடவர் கோல்களிலும் (crutches) சாய்ந்து கொண்டும், எல்லாவற்றினூடாகவும் இருக்கின்றனர். இன்றிரவு ஜனங்களாகிய நீங்கள் எனக்காக இதைச் செய்யும்படி நான் விரும்புகிறேன். நான் ஒரு சில நிமிடங்களில் கூறப்போவதற்கு நீங்கள் உண்மையான நெருங்கிய கவனத்தைச் செலுத்தும்படிக்கு நான் விரும்புகிறேன். மேலும் பிறகு நீங்கள் என்னுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளவும் என்னை விசுவாசிக்கவும் நான் விரும்புகிறேன். நீங்கள் அதைச் செய்வீர்கள்? மேலும் அப்படியே ...... உங்களுடைய காரியம் அதிக கடினமானது என்று எண்ண வேண்டாம். நம்முடைய கர்த்தருக்கு ஒரு கடினமான காரியம் என்பது என்ன? நான்... மரித்து நித்தியத்துக்குள் கடந்து சென்றதாக நான் அறிந்துள்ள மூன்று ஜனங்களைக் குறித்து இங்கே என்னுடைய வேதாகமத்துடன் சாட்சி கூற முடியும்; அவர்களில் யாரோ ஒருவர் கூட மரித்து சென்று விட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டார், அவர்களுடைய அன்பார்ந்தவர்கள் கூடி வந்திருந்தனர்; இன்றிரவு அவர் ஜீவிக்கிறார். பாருங்கள்? அவர் ஜீவிக்கிறார். மேலும் காரியங்கள்..... நீங்கள் உங்களுடைய புற்று நோயை எடுதுக்கொள்ளுங்கள். புற்று நோய்கள் தின்று விட்டு, எல்லா மாம்சமும் போய்விட்டிருந்து, அவைகள் தின்று விட்டிருக்கும்போது, நீங்கள் உங்களுடைய புற்றநோய்களை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் இங்கே இன்றிரவு அவைகள் இருக்கின்றன. சிறிது காலத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி வந்தாள், அவளுடைய பையன் டெக்ஸார்கானாவில் ஒரு முடிவெடுக்கும் ஒருவராக இருக்கிறான். நான் உள்ளே இருந்தேன், அது நாங்கள் கூட்டங்களைக் கொண்டிருந்த டெல்லாஸ் என்று நான் நம்புகிறேன். அவள் வரிசையினூடாக வந்தாள், அவள் தன்னுடைய கைக்குட்டையை இதைப்போல் மேலே கொண்டிருந்தாள். மேலும் அவள் என்னுடைய மேற்சட்டையை பற்றிப்பிடித்துக் கொள்வதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தாள். அது ஒரு... நாங்கள் அந்த வேகமான (ஜெப) வரிசையில், நாங்கள் கொண்டிருப்பதற்கு பயன்படுத்தியதை நாங்கள் கொண்டிருந்தோம். அவள் என்னுடைய மேற்சட்டையை பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மேலும் அவள்.....' 6அவள் அழுது கொண்டிருந்ததை நான் நினைத்தேன். நான் அவளுடைய கரத்தை பற்றிப் பிடித்தேன். மேலும் அங்கே ஒரு பெரிய புற்று நோய் மோதவும் கேட்கவும் தொடங்கினது, “திர்ர்ர், திர்ர்ர்” என்று ஒரு வினோதமான வகையில் அது சத்தம் உண்டாக்குகிறது. (சகோதரன் பிரான்ஹாம் விளக்குகிறார் - ஆசிரியர்). மேலும் நான் அவளுடைய கரத்தைப் பிடித்தேன். நான், “சகோதரியே, நீங்கள் புற்றுநோயைப் பெற்றுள்ளீர்கள் என்று நீங்கள் அறிவீர்களா?” என்றேன். அவள் தன்னுடைய கைக்குட்டையைக் கீழே போட்டாள், அவளுடைய மூக்கு தின்னப்பட்டிருந்தது. மேலும் அவள், “ஆம், ஐயா. நான் நீண்ட காலமாக டென்னஸியிலுள்ள மெம்பிஸில் மருத்துவம் செய்து கொண்டிருக்கிறேன்” என்றாள், “நீண்ட காலமாக என்னுடைய மருத்துவர் என்னைக் கைவிட்டுவிட்டார்” என்றாள், சுமார் முப்பத்தெட்டு நாற்பது வயதுள்ள ஒரு வாலிப பெண்மணி, அப்படியே சிறிதுகூட வயதுடையவளாக இருக்கலாம். நான், “நல்லது, அது.... நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்றேன். அவள், “சங்கை பிரான்ஹாம் அவர்களே.....” என்றாள். அவள் தாமே ஒரு மேய்ப்பராக இருந்தாள். மேலும் அவள், “நான் கொண்டிருக்கிறேன்... நான் உங்களுடைய கூட்டங்களைக் குறித்து கேள்விப்பட்ட முதற்கொண்டே” என்றாள், அவள், “நான் சுகமடையும்படி நீங்கள் எனக்காக தேவனிடம் வேண்டிக் கொள்ளுபடி நான் விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறியும்படிக்கு உங்களுடைய கவனத்தை அப்படியே நான் கவரும்படிக்கு முடியுமானால், நான் சுகமடைவேன் என்று நான் எப்பொழுதும் கூறினேன்” என்றாள். நான், “உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, சகோதரியே. தேவன் நிச்சயமாக அதற்காக உங்களுக்கு பலனளிப்பார் (reward)” என்றேன். 7இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு இரவு இங்கே கட்டிடத்தினூடாக ஒரு வாலிப மனிதர் ஓடிக்கொண்டே வந்தார். அவர், “சகோதரன் பிரான்ஹாம்...” என்றார். அவர் தன்னுடைய கையில் பற்றிக்கொண்டிருந்த இந்தப் பெண்மணியை நான் அறிந்துள்ளேனா, என்று என்னிடம் கேட்டார். நானோ, “இல்லை. எனக்குத் தெரியும் என்று நான் நம்பவில்லை” என்றேன். அது அவனுடைய வாலிப தாயாக இருந்தாள். அவள் சுகமாக்கப்பட்டது மாத்திரமல்ல, அவள் தன்னுடைய ஒரு மூக்கையும் கொண்டிருந்தாள். எனவே அவள், “அது ஆரம்பித்த போது, அப்படியே...?... அந்தக் கடைசியான இரவில் அவள் துன்பப்படுவது நின்றுவிடும்” என்றாள். ஒரு காலையில் அவள் படுக்கையிலிருந்து எழுந்து கண்ணாடியில் பார்த்த போது (அவள் அதன் மீது ஒரு துணியைக் கொண்டிருந்தாள்)... ஏன், அவளுடைய பிள்ளைகள் உணர்ச்சி வசப்பட்டனர் மற்றும் ஒவ்வொன்றும். மாம்சம் திரும்பவும் வளர்ந்திருந்தது. மேலும் அவள் ஒரு சுகமாக்கப்பட்ட மூக்கை மாத்திரம் கொண்டிருக்கவில்லை, ஆனால் அந்த ஒன்று தின்னப்பட்டிருந்த இடத்திற்கு வெளியே வேறொரு மூக்கு வளர்ந்திருந்தது. அவள் தன்னுடைய மருத்துவரிடத்தில் சாட்சி கூறுவதற்காகச் சென்றாள். இப்பொழுது, இதைக் கவனியுங்கள். அவள் சாட்சி கூறும்படி சென்றாள், “என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்றாள். “ஆம், ஆனால் என்ன நடந்தது?” என்றார். “நல்லது, நான் மருத்துவரை மாற்றி விட்டேன்” என்றாள் மேலும் அவள்.... அவர், “நல்லது, இப்பொழுது உன்னுடைய மருத்துவர் யார்?” என்றார். “நான் மருத்துவர் இயேசுவிடம் மருத்துவம் செய்கிறேன்” என்றாள். மேலும் கூறினாள்.... மருத்துவர் இப்பொழுது அவளிடம் கேட்டது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதைக்குறித்து சிந்தியுங்கள். அவர், “நான் எப்பொழுதாவது அவரைக் குறித்து கேள்விபட்டிருக்கிறேன் என்று நான் நம்பவில்லை . அவர் எங்கே மருத்துவம் செய்கிறார்?” என்றார். நீங்கள்.... “அவர் எங்கே மருத்துவம் செய்கிறார்?” அவள், “மகிமையில்” என்றாள். அது - அது சரியே. 8இப்பொழுது, அன்பான நண்பர்களே, அந்தக் காரியங்கள் உண்டாக்கிக் கூறப்படுவதில்லை. அவளுடைய பெயரையும் முகவரியும் நான் உங்களுக்கு கொடுப்பேன். நீங்கள் அவளுக்கு எழுதி நீங்களே அவளைக் காணமுடியும். மேலும் ஒ, ஆயிரக்கணக்கான காரியங்கள். இப்பொழுது, ஒரே ஒரு வியாதியஸ்தர் சுகமாக்கப்பட்டதாக நிச்சயமாகவே நிரூபிக்க முடியுமானால், தேவன் ஒரு சுகமளிப்பவர் என்பதை அது நிரூபிக்கும். அது சரியா? இங்கிருக்கும் எத்தனை பேர் தெய்வீக சுகமளித்தல் மூலம் சுகமாக்கப்பட்டுள்ளீர்கள், உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும். சற்று பாருங்கள். இப்படிப்படிப்பட்ட ஒரு மகத்தான திரளான சாட்சிகளால் நாம் சூழப்பட்டிருப்பதைப் பாருங்கள், இப்பொழுது இன்றிவு நம்முடைய முழு இருதயத்துடனும் அவரை விசுவாசிப்போம். இன்றிரவு நான் உங்களிடம் விரும்புவது என்னவென்றால், அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான். நீங்கள் குருடராகவோ, முடவராகவோ அல்லது இருதய கோளாறையோ கொண்டிருந்தால்..... 9இப்பொழுது, அங்கேயிருக்கிற மோசமானதும் மற்ற எதையும் விட அதிக ஜனங்களை துரிதமாக கொல்லுகிற ஒரு காரியம் என்வென்றால் அது இருதயக்கோளாறு தான். இரண்டாவது, புற்றுநோய். மூன்றாவது, நுரையீரல்களைப் பாதிக்கும் கடுமையான காச நோய் (tubercular). இங்கே அமெரிக்காவில் மனித ஜீவிய பாதையின் மூன்று பெரிய சத்துருக்கள் இவைகளே. இப்பொழுது, இங்கே பாருங்கள். நான் இங்கே தங்களுடைய கக்கதண்டங்களில் (crutches) மீது சாய்ந்து கொண்டிருக்கிற வயதான தாய்மார்களாகிய ஜனங்களைக் காண்கிறேன். நான் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவர்களையும் முழுவதும் ஆயத்தமான நிலையில் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஏழையான சிறு நபரையும் காண்கிறேன். மேலும் நான்... ஏன், அவர் மேலே இருக்கவும் சுகமடையவும் விரும்புகிறார். கில்வாத நோயால் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வயதான தகப்பனார் அங்கே வெளியே உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் நோக்கிப் பார்க்கிறேன். மேலும் அவர் இப்பொழுது அழுதுகொண்டு, என்னை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் சுகமடையவே விரும்புகிறார். ஆனால் அந்த ஜனங்கள் அப்படியே தங்களுடைய வேதனைகளில் ஒரு சாதாரண ஜீவிய காலத்தில் ஜீவிக்கலாம்; கீல்வாத நோயானது ஒரு குறிப்பிட்ட நிலையை அடையும் வரையில் அவர்கள் அதிகமாக அவதிப்படலாம், பிறகு அது - அது வேதனையில்லாமல் இருக்கிறது. எல்லா எலும்புகளும் ஒன்றாக இயங்குகிறது. 10ஆனால், இப்பொழுது, நண்பர்களே, அவர்கள் அனேக வருஷங்கள் ஜீவிக்கலாம். ஆனால் ஒரு இருதய கோளாறோ அல்லது ஒரு புற்றுநோயுடன் கூடிய ஒரு மனிதன் சரியாக இப்பொழுதே ஏதோவொரு உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறான், அல்லது சரியாக இப்பொழுதே அவன் மரிக்கப் போகிறான். பாருங்கள்? எனவே இப்பொழுது நீங்கள் இன்றிரவு அனேக காரியங்கள் செய்யப்படுவதை காணும்படி இருப்பதையே நான் விரும்புகிறேன், இந்தத் தூக்குப்படுக்கைகளிலும், சக்கர நாற்காலிகளிலும், கக்கதண்டங்களின் மீதும், தாங்கும் உபகரணங்களின் மீதும் இருக்கிற இந்த ஜனங்களை தேவன் ஒரு சில நிமிடங்களில் நமக்கு ஒரு ஜெப வரிசையைத் தரும்படியாகவும், வியாதிப்பட்டவர்களுக்காகவும் வேதனைப்படுபவர்களுக்காகவும், ஜெபிக்கத் துவங்கவும் நான் ஜெபிக்கப் போகிறேன். உங்களுடைய ஜெப அட்டை அழைக்கப்படுமானால் (ஆமென்), நீங்கள் இங்கே மேடையின் மேல் வரும்போது, நீங்கள் அந்த நாற்காலிகளிலிருந்தோ அல்லது கட்டில்களிலிருந்தோ அல்லது தூக்குப்படுக்கைகளிலிருந்தோ அல்லது அது எதுவாக யிருந்தாலும் அதிலிருந்தும் எழும்பப்போகிறீர்களென்றும், இந்த மேடையை விட்டு புறப்பட்டு, சுகமடைந்தவர்களாக நடந்து செல்லப்போகிறீர்கள் என்றும் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பாருங்கள்? இப்பொழுது நான்... நீங்கள் சுகமடைவீர்களா இல்லையா என்பதை நான் உங்களிடம் கூற முடியாது. ஆனால் அவர் என்னிடம் சொல்லும்படி கூறுவதை மாத்திரமே நான் கூற முடியும். அவர் என்ன கூறுகிறாரோ அதை நீங்கள் செய்வீர்களானால், அப்போது நீங்கள் சரியாக இருப்பீர்கள். நீங்கள்... நீங்கள் எழுந்திருக்கும்படி நான் உங்களிடம் கேட்பேனானால், நீங்கள் எழும்புங்கள். நீங்கள் எவ்வளவு மோசமாக முடமாகி இருக்கிறீர்கள் என்பது எனக்கு கவலையில்லை, நீங்கள் எழும்புங்கள். நீங்கள் அப்படியே முயற்சி செய்யுங்கள். நின்று.... என்ன சம்பவிக்கிறது என்று கவனிக்க துவங்குங்கள். பாருங்கள்? அது தவறினதை நான் கண்டதேயில்லை. அவர் என்னிடம் கூறும் வரையில் நான் உங்களிடம் கூற மாட்டேன். 11இப்பொழுது, இந்த அடையாளங்கள் இந்த கூட்டத்தில் நடக்காமல் இருந்தால், அவர்கள் வருடகணக்காக மறக்கப் பட்டிருந்தார்கள் எனவும் இந்த வியாதிகள் காட்டப்பட்டன வென்றும், மேலும் அதைபோன்று எல்லாம் பரிபூரணமாகவும் ஒவ்வொன்றும் பரிபூரணமாய் இருந்தனவென்றும், இந்த காரியங்களை ஜனங்களுடைய இருதயம் பேசிக் கொண்டிருந்தன, என்று நான் இங்கே வந்த முதல் நாள் இரவு ஜனங்களாகிய உங்களிடம் கேட்டேன். நான்... அது சம்பவிக்காமலிருந்தால், அப்போது நீங்கள் நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியென்று கூற முடிந்திருக்கும். ஆனால் அது சம்பவித்திருந்தால், “தேவனுக்கு மகிமையை செலுத்துங்கள்” என்று நான் கூறினேன். நான் அதைக் கூறினேனா? இப்பொழுது, நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், அது சம்பவித்ததா? அது சம்பவித்ததுண்டானால், உத்தமமாய் இருங்கள், அது சம்பவித்திருந்தால், நீங்கள் அவர்களுக்கு அந்தக் காரியங்கள் சம்பவித்ததை கண்டிருந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களுக்கு நன்றி. எத்தனை பேர் முதல் தடவையாக இங்கே இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை நாங்கள் காணட்டும்? உங்களுடைய முதல் தடவையான இங்கே இருக்கும் ஜனங்கள்? தங்களுடைய முதல் தடவையாக இங்கே இருக்கும் அவர்களை சற்று நோக்கிப் பாருங்கள். இப்பொழுது, அந்தக் காரியங்கள் உண்மையாகவே சம்பவித்தனவென்று, இங்கேயிருக்கும் எத்தனை பேர் இங்கேயிருக்கும் அந்த ஜனங்களுக்கு உங்கள் கரங்களை உயர்த்துவதன் மூலம் சாட்சியாயிருப்பீர்கள். நாங்கள் உங்கள் கரங்களைக் காணட்டும். இப்பொழுது, முதல் தடவையாக வந்திருக்கும் ஜனங்களாகிய நீங்கள், பாருங்கள். ஜனங்களுடைய கோளாறு என்னவென்று கூறுதல் மற்றும் அவர்களுடைய ஜீவியத்தின் காரியங்களை அவர்களிடம் கூறுதல் போன்ற பகுத்தறிதல்களை நீங்கள் பார்ப்பீர்கள். 12இப்பொழுது சிலசமயங்களில் அந்த மனிதர்கள் முன்னரே அறிந்த மூன்று நான்கு அல்லது ஐந்து காரியங்களை அது கொண்டு வருகிற போது நான் சரியாக துரிதபட வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் உட்கார்ந்து பேசுவீர்களானால், அப்படியே எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அதுவரை அந்த தரிசனம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். மேலும் பிறகு நீங்கள்... அந்த தரிசனம் நின்ற உடன் நீங்கள் விரும்பினால் அதை மீண்டும் துவங்கலாம். அப்படியே பேசிக் கொண்டிருங்கள். அது மீண்டும் ஆரம்பிக்கும் அதற்கு எந்த கட்டுப்பாடும் எனக்கு கிடையாது. மேலும் இப்பொழுது நான் உங்களிடையே சிறியவனாய் இருக்கிறேன் என்பதை நானே வெளிப்படையாய் ஒப்புக் கொள்கிறேன். இந்த பிற்பகல் என்னுடைய “சுயசரிதை”யை நீங்கள் கேட்டீர்கள். நான் எதனூடாக வந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் - நான் உங்கள் மத்தியில் சிறியவனாயிருக்கிறேன். ஆனால் என்னுடைய எஜமான் தம்முடைய பிள்ளைகளுக்கு முன்பாக தம்மை பிரதிநிதித்துவப் படுத்தும்படியான இந்த வாய்ப்புக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். பாருங்கள்? அது சரியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் இப்பொழுது வார்த்தையின் சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன். மேலும் சற்று நேரத்தில் ஆராதனைக்கு நாம் போவோம். பரிசுத்த மத்தேயு 4-ம் அதிகாரம் 23-ம் வசனம் தொடங்கி நான் வாசிக்க விரும்புகிறேன். பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி, நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று அப்பொழுது பலவித வியாதிகளையும், வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், சந்திரரோகிகளையும், திமிர்வாதக் காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார். கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின் சென்றார்கள். இப்பொழுது, அப்படியே சிறிது நேர பேசுதலுக்காக, ஒரு பாடத்திற்காக இதை எடுக்கும்படி நான் விரும்பினேன். பரிசுத்த யோவான் 17-ம் அதிகாரம் ஒன்றாவது வசனத்திலிருந்து.இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து : பிதாவே, வேளை வந்தது, ... 13நாம் நம்முடைய தலைகளை தாழ்த்த முடியுமா. எங்கள் பரலோக பிதாவே, இந்தக் காட்சியின் இறுதிகட்டத்தில் இதைச் செய்யும்படி உம்மிடம் கேட்கும்படிக்கு, நாங்கள் கூட்டத்தின் முடிவுக்கு அருகில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மகத்தான கூட்டத்திற்காக அப்படியே இப்பொழுது உம்மிடம் நன்றியுள்ளவர்களாயிருப்பதற்கு, பயபக்தியோடும், மரியாதையோடும் நாங்கள் எங்களுடைய இருதயங்களை உம்மிடம் வணங்குகிறோம், காட்சியின் இந்த மகத்தான இறுதிகட்டத்தில் அனேகர்... அனேகர் மட்டும் அல்ல, ஆனால் வியாதியஸ்தராகவும் அல்லது அசுத்த ஆவிகளால் பீடிக்கப்பட்டவர்களுமாகிய, தற்போது உட்கார்ந்து கொண்டிருக்கும் ஜனங்களாகிய எல்லோரும் இன்றிரவு விடுவிக்கப்படுவார்களாக, மகிமையை நீர் பெற்றுக் கொள்ளும். பிதாவே, நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் நேரத்தில், இந்த சுகமாக்கும் வரிசையில் தங்களுடைய விசுவாசத்தை கொடுக்கும்படி (lend) இன்றிரவு என்னுடன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் என்னுடைய சகோதரர்களாகிய ஊழியக்காரர்களுக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவனுடைய தூதனாகிய நான் அவருடைய ஊழியக்காரன்) உம்முடைய ஆவியானவர் தாமே இன்றிரவு வந்து ஒரு குறிப்பிடத்தக்க சமயத்தில் அதைச் செய்து, இங்கே அவர் இருக்கிறார் என்ற தம்முடைய மகத்தான பிரசன்னத்தை நிரூபணமாக்குவாராக, ஜனங்கள் இனிமேலும் பயந்து கொண்டிருக்க வேண்டாம் என்று நான் ஜெபிக்கிறேன்; ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட பரலோகத்தின் மகத்தான தேவன் தாமே இங்கே ஜனங்களிடையே இருக்கிறார் என்பதையும், இப்பொழுது தம்முடைய பிள்ளைகளிடையே கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அறிவதற்கு, அவர்கள்.... அவர்கள் ஏதாவதொன்றை தவறாக செய்யத்துவங்கியிருந்தால், அங்கே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் கண் அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களாக; அவர்கள் ஏதாவதொன்றை சரியாகச் செய்வார்களானால், அதற்கு பதிலாக ஒரு பரிசை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் ஒரு பரலோக பிதா அங்கே இருந்து அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிவார்களாக. நாம் விதைக்கிறதற்கேற்ப நாம் அறுப்போம். இப்பொழுதும், கர்த்தாவே, நீர் இந்தக் கூட்டத்தை ஒரு மகத்தான ஆசீர்வாதமாக ஆக்குவீராக, ஜனங்கள் தாமே இந்த சில வார்த்தைகளை புரிந்துகொள்வார்களாக. உம்முடைய ஊழியக்காரனின் உதடுகளையும், உம்முடைய ஜனங்களின் இருதயங்களையும் நீர் விருத்தசேதனம் செய்ய வேண்டுமென்றும், நான் சரியான காரியங்களைப் பேசவும், அவர்கள் அவைகளைக் கேட்டு விசுவாசிக்க வேண்டுமென்றும் நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 14இப்பொழுது, நாமெல்லாரும் வெளியே சுற்றிலும் இருக்கிற எல்லோரும் ஆராதனையின் அடுத்தப் பகுதியிலும் ஜெபவரிசையிலும் அமைதியாக அமர்ந்திருப்போமாக. கூடாரத்திலுள்ள வாலிப ஜனங்களாகிய நீங்கள், உங்களுடைய அருமையான நடத்தைக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். மேலும் இப்பொழுது, இங்கே உங்களுடைய தாய்மார்களும் தகப்பன்மார்களும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுடைய வர்களாய் இல்லாமலிருந்தால், நீங்கள் உங்களுடையவர்களை நேசிப்பது போன்று அப்படியே அவர்களை நேசிக்கும் யாரோ ஒருவருடையவர்களாய் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். மேலும் அவர்கள் சுகமாயிருப்பதற்கு உதவ என்னால் முடிகிற அனைத்தையும் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தாயானவள் வியாதிப்பட்டோ தேவையுள்ளவளாகவோ இருந்தால் என் தாய்க்காக நீங்களெல்லாரும் செய்யும் எதையும் நான் பாராட்டுவேன். என்னிடமாகவும் நீங்கள் அதேவிதமாகவே உணருவீர்கள் என்பதை நான் அறிவேன். 15மேலும் இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு நெருங்கிய கவனத்தை தாருங்கள், உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசியுங்கள். இப்பொழுது, நான் ஒரு பேச்சாளன் அல்ல, மேலும் நான் போதிக்கும்படி நோக்கங்கொள்ளவில்லை. அது சரியே. ஆனால் நீங்கள் இப்பொழுது உங்கள் விசுவாசத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக நான் அப்படியே ஒரு சில வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன். இப்பொழுது, வரங்களைக் குறித்து நாம் சிறிது நேரம் பேசலாம். தேவனுடைய வரங்கள் பூமியின் மீது எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அனேக நேரங்களில், அவைகளை (வரங்களை - தமிழாக்கியோன்) அணிந்து கொள்ளத்தக்க யாரோ ஒருவரையாவது தேவன் கண்டு பிடித்திருக்கவில்லை. ஆனால் நெருங்கிய கவனத்தை செலுத்துங்கள். தேவன் தம்முடைய ஆவியை பூமியை விட்டு எடுப்பதில்லை. தேவன் தம்முடைய மனுஷனை பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தம்முடைய ஆவியையல்ல. நீங்கள் அதை அறிவீர்களா? எலியாவின் மேலிருந்த ஆவி இரண்டு மடங்காக எலிசாவின் மீது வந்தது (அது சரியா?) மீண்டும் அது யோவான் ஸ்னானகன் மீது வந்தது. அது சரியா? எனவே தேவன் தம்முடைய ஆவியை எடுத்துக்கொள்வதில்லை, அவர் தம்முடைய மனிதனையே எடுத்துக்கொள்ளுகிறார். அவர் தம்முடைய குமாரனை பரலோகத்துக்கு எடுத்துக் கொண்டார். அதன் பிறகு தான் தம்முடைய ஆவியை அனுப்பினார். மேலும் உலகத்தின் முடிவு பரியந்தம் நம்மைத் தேற்றும்படி (to comfort) நம்முடனே கூட அவர் இருப்பார் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். 16இப்பொழுது, அப்போஸ்தலர்களின் நாட்களில் இருந்த அதே பரிசுத்த ஆவியானவரே. இப்பொழுது இங்கே இருந்து (நிகழ்காலம்) இந்தக் கூட்டத்தில் ஜனங்களின் நடுவில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் கவனிக்கும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது, இதைப் புரிந்து கொள்வது நமக்கு இன்றியமையாததாகும். இது உங்கள் சகோதரனாகிய நானல்ல. அது இங்கிருக்கும் உங்கள் கர்த்தராகிய இயேசுவே. நாமெல்லாரும் அவருடைய பிரதிநிதிகளாயிருக்கிறோம். இப்பொழுது, அது சத்தியமென்று நாமறிவோம். அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அவருடைய பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், அவர் மிகவும் வாஞ்சையுள்ளவராய் இருக்கிறார், ஜனங்கள் எந்த அளவு அவரை கிரியை செய்ய அனுமதிக்கின்றனரோ அந்த அளவு ஜனங்கள் மூலமாக அவர் கிரியை செய்ய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, அவிசுவாசத்தின் காரணமாக அனேக காரியங்களை இயேசு தாமே செய்ய முடியவில்லை. அது சரியா? அனேக காரியங்களை அவர் செய்ய முடியவில்லை. அதை நினைத்துப்பார்க்கவே நாம் வெறுக்கிறோம், ஆனால் அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக அவர் அதைச் செய்ய முடியவில்லை . 17இப்பொழுது, சரியான மனப்பான்மை ... “சரியான மனப்பான்மை” என்று நான் கூறும்போது நான் எதை அர்த்தப்படுத்துகிறேன் என்பதை இங்கே நெடுகிலும் உள்ள நீங்களெல்லாரும் புரிந்து கொள்கிறீர்களா? அதாவது... தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தத்தின் மேலுள்ள உங்கள் சரியான மனப்பான்மையே எந்த வாக்குத்தத்தத்தையும் சம்பவிக்கப்பண்ணும். இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கலாம். “நல்லது, என்னுடைய விசுவாசம் பலவீனமானது” என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் அதை அறிக்கையிட மாட்டேன். பாருங்கள்? சாத்தான் அதை அறிவதற்கு அனுமதிக்க வேண்டாம். “நான் நல்ல விசுவாசத்தை பெற்றுள்ளேன். நான் தேவனை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்” என்று எப்பொழுதும் கூறுங்கள். பாருங்கள்? சாத்தானிடம் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டாம். மேலும் நீங்கள் அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொள்ளும் போது, அதற்கு மேலும் உங்களை வியாதிப்பட்டவர் போலவோ அல்லது ஊனமுற்றவர் போலவோ நடத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் சுகமடைந்து விட்டீர்கள் என்று விசுவாசியுங்கள். அவரை, அவருடைய வார்த்தையில் பற்றிக் கொள்ளுங்கள். அதன்பிறகு அது முற்றிலும் தேவன் மீதாக உள்ளது, உங்கள் மீதல்ல. பாருங்கள்? நீங்கள்... தேவனை அவருடைய வார்த்தையில் நீங்கள் எவ்வளவு காலம் எடுக்கிறீர்களோ, அப்போது வார்த்தை, செய்யும்படி அது வாக்குத்தத்தம் பண்ணினதைப் பிறப்பிக்கும். அது சரியா? இப்பொழுது, விசுவாசம் கொண்டிருங்கள், அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 18இப்பொழுது, இயேசு இங்கே பேசிக் கொண்டிருந்தார், அவர், “பிதாவே, வேளை வந்தது” என்றார். இப்பொழுது, அங்கே ஒவ்வொன்றிற்கும் காலங்கள் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஏதோவொரு பருவத்தில் நீங்கள் விதைக்கிறீர்கள், ஏதோவொரு குறிப்பிட்ட பருவத்தில் (seasons) நீங்கள் அறுக்கிறீர்கள். சரியாக காரியங்கள் சம்பவிக்க வேளை வரும்போது அங்கே பருவ காலங்கள் உள்ளன. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உலகத்தை ஜலத்தினால் அழிக்கும்படியாக தேவனுக்கு ஒரு வேளை வந்திருந்தது. நோவா என்றழைக்கப்பட்ட ஒரு மனுஷனை அவர் அனுப்பினார். தேவன் உலகத்தை நியாயந்தீர்க்க ஆயத்தமானார். அவர் எடுத்துக் கொண்டார். நோவா பேழைக்குள் செல்லும்படியான வேளை வந்தது. பாருங்கள். நோவா பேழைக்குள் செல்லும்படி தேவன் அவனுக்காக ஆயத்தமாக்கும்வரை நோவாவினால் பேழைக்குள் செல்ல முடியவில்லை. நோவா பேழைக்குள் செல்லும்படியான காலம் (season) வந்த போது, தேவன் நோவாவுக்குப் பின்னால் கதவை அடைத்தார். அது சரியா? வேறு யாருக்காவது எப்பொழுதாவது உட்பிரவேசிக்கும் எல்லா வாய்ப்புகளும் போய் விட்டன, ஏனெனில் தேவன் கதவை அடைத்து விட்டார். தேவன் உங்கள் ஒவ்வொருவருக்கும் கதவை அடைக்கப்போகும்படியான ஒரு வேளை அங்கே வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாகவே, ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தின் காரணமாக தன் இரக்கத்தின் நாளை போக்கடிக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? யாரோ ஒருவர்... இங்கே அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஊழியக்காரர்களில் சிலர் உங்களுக்கு விருப்பமானால் அங்கே வெளியே சென்று, அவர்களுடன் ஜெபம் பண்ணுங்கள். அங்கே அந்தப் பக்கமாக அவர்களைக் கொண்டு வாருங்கள். உண்மையாகவே யாரோ ஒருவர் மயக்கமடைந்துள்ளார், கட்டிடத்தில் மிகவும் உஷ்ணமாக உள்ளது. இரண்டு ஊழியக்காரர்கள் அங்கே வெளியே அவர்களை எடுத்து செல்லுங்கள், அப்போது அவர்கள் அவர்களுடன் ஜெபிக்க முடியும். 19இப்பொழுது, இந்த ஒரு வழியில் நோக்கிப் பாருங்கள், நண்பர்களே. இதுவே தேவனுடைய வார்த்தையாக உள்ளது. சுகமடைதலைக் குறித்து நீங்கள் அக்கறை கொள்வீர்களானால், நான் கூறுவதற்கு கவனம் செலுத்துங்கள். பாருங்கள்? எனக்கு கவனம் செலுத்துங்கள். நிச்சயமாகவே, உங்கள் கவனத்தை நான் உங்களிடம் கூற முயற்சிப்பதிலிருந்து திருப்பும்படி உங்கள் கவனத்தைக் கவரும்படி சாத்தான் அந்த மனிதனுக்கு வியாதியை உண்டாக்கினான். அதுவே அவனுடைய அலுவலாக உள்ளது. என்ன சம்பவிக்கிறது என்பது காரியமல்ல, இங்கே உள்ளே தேவனுடைய மகத்தான கரம் அசைவாடுவதை தேவனுடைய கிருபையால் இன்றிரவு காணும்படி தீர்மானித்தேன். மேலும் பிறகு நீங்கள் எனக்கு கவனம் செலுத்தும்படிக்கு நான் விரும்புகிறேன், எனவே இந்த வழியில் கவனியுங்கள். உங்கள் கவனத்தை எனக்கு கொடுங்கள். மேலும் இப்பொழுது, நீங்கள் அப்படியே விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால், தேவனை அவருடைய வார்த்தையில் பற்றிக்கொள்ளுங்கள். 20இப்பொழுது, கவனியுங்கள். நோவா பேழைக்குள் செல்வதற்கான வேளை வந்தபோது, கதவுகள் அடைக்கப்பட்டன; ஆனால் அந்த வேளை வருவது வரை அவைகள் அடைக்கப்பட்டிருக்கவில்லை. இஸ்ரவேல் புத்திரர்கள் எகிப்திய அடிமைத்தனத்தினின்று விடுதலை அடைவதற்கான ஒரு நேரம் வருவதற்கான வேளை இருந்தது. வாக்குதத்தத்தின் வேளை நெருங்கிய போது, யோசேப்பை அறிந்திராத ஒரு பார்வோன் எழும்பினான். ஏன்? காலமானது அங்கே இருந்தது. அந்த வேளை வரை அவர்கள் இஸ்ரவேலரை மதித்தனர். ஆனால் காலமானது அங்கே இருந்தது, அதற்கு மேலும் மதிப்புகள் (respects) கிடையாது, தேவன் ஜனங்களின் மீது தம்முடைய நியாயத்தீர்ப்புகளை வெளிப்படுத்த முடிந்தது. வேளையானது வந்திருந்தது. ஒரு தடவை, எபிரேய பிள்ளைகள், தாங்கள் பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்ட போது... கவனியுங்கள். அவர்கள் எது சரியானதோ அதற்காக நிற்க வேண்டிய வேளை வந்தது. அந்த ராஜா ஒரு பிரகடனத்தைச் செய்தான். இந்த பொற்சிலையை பணிந்து கொள்ளாதவன் எவனோ அவன் எரிகிற அக்கினிச் சூளையில் எறியப்படுவான் என்று அவன் கூறினான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் தங்களின் நிறத்தையும், தேவனிலுள்ள தங்களின் விசுவாசத்தையும் காட்டும்படியான வேளை வந்தது. எனவே அவர்கள் பொற்சிலைக்கு தங்கள் முதுகைத் திருப்பினார்கள். அவர்கள், “எங்கள் தேவன் எங்களை இந்த அக்கினி சூளையிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார்; விடுவிக்காமற்போனாலும் நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதில்லை” என்றனர். அங்கே அது இருந்தது. அது வேளையாக இருந்தது, காலமானது அங்கே இருந்தது. எனவே அவன் அவர்களை எரிகிற அக்கினிச் சூளையினுள் எறிந்து, அந்த மார்க்கத்தை தங்களை விட்டு எரித்துப் போட போவதாக இருந்த போது அந்த வேளையானது வந்தது. 21அதைத்தான் சாத்தான் எல்லா நேரங்களிலும் செய்ய முயற்சிக்கிறான். உங்களை ஏதோவொன்றின் மீது எரித்துப்போட, உங்களுக்காக ஜெபிக்கப்படும்போது உங்களை வியாதியஸ்தர் ஆக்குகிறான், தேவனுடனான உங்கள் அனுபவத்தை நீங்கள் இழந்து விட்டீர்களென்று உங்களை நினைக்கச் செய்கிறான். வேளை வந்தது அவன் உங்களிடம் ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறான். நீங்கள் தேவனுடைய வார்த்தையின் மீது நிற்க வேண்டியதாயிருக்கும் போது வேளை வருகிறது. தனித்து நில்லுங்கள். ஆனால் அந்த வேளை வரும்போது, அங்கே நில்லுங்கள். நீங்கள் உங்களை உங்களுடைய உணர்ச்சிகள் மற்றும் உங்கள் விசுவாசத்திற்கு இடையே பிரிக்க வேண்டியிருக்கும் போதுதான் ஒரு வேளை இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த வேளை தான் இன்றிரவும் இருக்கிறது. இந்த எபிரேய பிள்ளைகள் ஒரு அக்கினி சூளையின் மூலமாக தங்களுடைய சாட்சியை முத்தரிக்க வேண்டியதாயிருந்த போது அந்த வேளை வருகிறது. நான் அவர்களை அந்தக் காலையில் காண முடிகிறது. சீக்கிரமாக நாம் பார்ப்போம். நான் அவர்களை அந்தக் காலையில் காண முடிகிறது. பாபிலோனில் ஒரு பயங்கரமான வேளை வந்தது. ராஜா, “இப்பொழுது, பாருங்கள். நாம் இங்கே சில மதவெறியர்களைப் பெற்றுள்ளோம். அவர்கள் தங்களுடைய மார்க்கத்தின் காரணமாக நம்மை சிறு தொந்தரவுக்கு ஆளாக்கி விட்டார்கள். எனவே நாம் அப்படியே அங்கே ஒரு அக்கினி சூளையைக் கட்டியுள்ளோம், அதன் சூடானது எப்பொழுதும் சூடாக்கப்பட்டதை விட ஏழு மடங்கு சூடாக்கப்பட்டுள்ளது. நாம் அங்கே அவர்களை எரித்து விடலாம்” என்று கூறினான். 22ஒரு மனிதனை விட்டு பரிசுத்த ஆவியானவரை எரித்து விடலாம் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு செய்ய இயலாது. கவனியுங்கள். இராஜாதாமே ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவருடைய...?... வேளை வந்தது. அவர்கள் இந்த எபிரேய பிள்ளைகளைக் கட்டி ஒரு ஏணிப்படிக்கு முன்புறத்தில் அவர்களை வைத்து, அவர்களை இந்த மகத்தான சூளையில் போடும்படிக்கு மேடையான ஒரு தளத்தில் நடக்கத் தொடங்கினர். சாத்ராக், மேஷாக்கிடம், “நீ ஜெபித்து விட்டாயா என்பதை சொல்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. சிலசமயங்களில் சாத்தான் சூட்டை தொடங்கும் போது, நாம் நின்று “கர்த்தாவே, நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேனா?” என்று பரிசோதிக்க வேண்டியதாயுள்ளது. சாத்ராக், “ஆம் இப்பொழுது ஜெபமெல்லாம் செய்யப்பட்டு விட்டது” என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. “நீ பின்வாங்க விரும்புவாயோ, பையனே” என்று கேட்டான். “இல்லை. எங்களின் சாட்சியை எங்களது சொந்த ஜீவனால் முத்தரிக்கவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஆயத்தமாக உள்ளோம்”. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், “இப்பொழுது, நீங்கள் சிலையை பணிந்து கொள்வீர்களானால், நான் உங்களை திரும்ப கொண்டு வருவேன்” என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. “இல்லை. நாங்கள் கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் எங்களுடைய வழியை எடுத்துக்கொள்கிறோம். நான் அதனூடாக போய்க் கொண்டிருக்கிறேன்”. அது தீர்மானங்களுக்கான வேளையாக இருந்தது, ஒரு சில நிமிடங்களே இருந்தது. 23இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களில் அனேகர் அதே நிலையில் இருக்கலாம்: இருதய கோளாறு, மற்றும் இந்த இருக்கைகளிலும் கக்கதண்டங்கள் மீதும் மற்றும் காரியங்களிலும் கட்டப்பட்டிருத்தல். இந்தக் கூட்டத்தில் அப்படியே ஒரு சில நிமிடங்களே விடப்பட்டிருக்கலாம். உங்களுடைய தீர்மானங்களைச் செய்யுங்கள். அதை நீங்கள் செய்வதற்கான வேளை வந்து விட்டது. நான் சத்தியமென்று கூறினவற்றையும், தேவன் தம்முடைய வேதாகமத்தில் எழுதியுள்ளவைகளையும் நீங்கள் விசுவாசிக்கலாம் அல்லது இதே நிலையில் வெளியே நடந்து செல்லலாம். ஆனால் வேளை வந்துவிட்டது. அவன், ''சரி. அவர்களை மேலே கொண்டு போங்கள்“ என்று கூறுவதை நான் கேட்க முடிகிறது. சூடானது சிறிது மோசமாக ஆகத் தொடங்கியது. கவலைப்பட வேண்டாம். நீங்கள் இன்றிரவு அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்வீர்களானால், நாளைக்கு சாத்தான் வெப்பத்தை உங்கள் மீது வைப்பான். அதைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆம், ஐயா. அவர்கள் சிறிது தூரம் நடக்கத் தொடங்கினார்கள், அவன், “நிச்சயமாகவே நீ ஜெபித்து விட்டாயா?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. “ஆம்” “சரி” எழுந்து சரியாக ஒருபடி மேலே சென்றார்கள் அவர்கள் உள்ளே போய்க்கொண்டிருந்த போது, அவர்கள் மயக்கமடைவது போல் உணரத் தொடங்கினர். ஒரு சில நிமிடங்களில் தங்களுடைய ஈட்டிகளுடன் உள்ள இந்தப் பாதுகாப்பு படை வீரர்கள், எப்பொழுதும் சூடாக்கப்பட்டதை விட ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட எரிகிற அக்கினிச் சூளையினுள் அவர்களைத் தள்ளிவிட ஆயத்தமாக இருப்பதை என்னால் காண முடிகிறது. 24கவனியுங்கள். நாம் இங்கே ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க அவலட்சணமான படத்தை வரைந்து கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய காமிராவை ஒருமுறை இந்த வழியில் மேலாக திருப்பலாம். ஓ, என்னே. இங்கே கீழே எப்போதும் ஏதாவதொன்று சம்பவித்துக் கொண்டிருக்கும் போது, அங்கே மேலேயும் ஏதாவதொன்று சம்பவித்துக் கொண்டுதானிருக்கிறது. எப்போதும் அதற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். சாத்தான் அலுவலில் இருக்கும் போது, இயேசுவும் அலுவலில் ஈடுபடுகிறார். நீங்கள் எப்பொழுதாவது உங்கள் விசுவாசத்திற்கு விட்டுக் கொடுக்கும் போது, அதுதான் செல்வதற்கான வழியாகும். அதை கிறிஸ்துவுக்குக் கொடுங்கள். நாம் இந்த வழியாக கண்களை உயர்த்திப் பார்க்கலாம். தம்முடைய மாட்சிமையில் அங்கே மேலே உட்கார்ந்திருக்கும் அவரை என்னால் காண முடிகிறது. தம்முடைய ஆசாரிய வஸ்திரம் தம்மைச் சுற்றிலும் தொங்கிக்கொண்டிருக்க, கீழே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பிரதான தூதன் அவருடைய வலது புறத்தில் வருவதை நான் காண்கிறேன். அவனுடைய பெயர் பிரதான தூதனாகிய காபிரியேல். அவன் பட்டயத்தை உருவினவனாய் மேலே ஓடி வருகிறான். அவன், “எஜமானே, நீர் கீழே பாபிலோனில் பார்க்கிறீரா? உம்முடைய ஜனங்கள் அங்கே கீழே உமக்காக நிற்கிறார்கள். அவர்கள் நிற்பதற்கான வேளையானது வந்துள்ளது. அவர்கள் உமக்காக நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அங்கே அந்த ஜனக்கூட்டம் அவர்களை அந்த எரிகிற அக்கினிச் சூளையில் தள்ளப் போகின்றனர். அங்கே கீழே செல்வதற்கு என்னை அனுமதியும். நான் அந்தக் காரியத்தையே துடைத்துப் போடுகிறேன்” என்றான். அவனால் அதைச் செய்ய முடிந்திருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா. இவைகளின் மீது தாக்குவதற்கான உத்தரவை அவர் தம்முடைய தூதர்களுக்குக் கொடுப்பார் என்று அவர் கூறினார். கர்த்தருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளயமிறங்குகிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 25காபிரியேல், “நான் அங்கே கீழே செல்லும்படி நீர் அனுமதித்தால், நான் அங்கே கீழே சென்று, பாபிலோனை உலக வரைப்படத்திலிருந்தே துடைத்து நீக்கி விடுவேன். நீர் அவர்களைக் குறித்து எண்ணிப்பார்த்தீரா?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. எஜமான், “ஆம் காபிரியேலே. நீ ஒரு அற்புதமான தூதன். நான் உன்னை உண்டாக்கின நாள் முதற்கொண்டு எப்பொழுதும் என்னுடைய வலது கரத்தில் உட்கார்ந்து, எனக்கு கிழ்ப்படிந்து வருகிறாய். ஆனால் நீ போவதை என்னால் அனுமதிக்க முடியாது. அப்படியே உன்னை அனுப்ப இயலாது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. பிறகு இந்த வழியாக மற்றொரு தூதன் வருவதை நான் காண்கிறேன். தேவன் தம்முடைய கட்டளைக்கு கீழ்படியும் தூதர்களை பரலோகத்தில் கொண்டுள்ளார், என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறொருவன் மேலே வந்து, அவரை நோக்கிப்பார்த்து, ஒன்றை அவசர அவசரமாக செய்ய வைப்பதை என்னால் காண முடிகிறது. அவன் பெயர் எட்டி. அவன் அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் எல்லா தண்ணீர்கள் மேலும் அதிகாரம் கொண்டவன். அவன், “எஜமானே, உம்முடைய பிள்ளைகள் கீழே பாபிலோனில் உமக்காக நிற்கின்றனர், இந்தக் காலையில் அவர்கள் அவர்களை எரிகிற அக்கினிச் சூளையில் எறியப்போகிறார்கள். அவர்கள் ஏறக்குறைய அதனருகில் வந்துவிட்டனர். நீர் என்னை உண்டாக்கின முதற்கொண்டு நான் உம்முடைய பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறேன். நான் தண்ணீர் மீது அதிகாரம் கொண்டவன். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தில், நான் ஆழத்தின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிட்டு, பூமியின் மீதியிருந்தவைகளை துடைத்து விட்டு, வெள்ளத்தால் முழு உலகையும் அழித்தேன். இந்தக் காலையில் அங்கே கீழே செல்ல என்னை அனுமதியும். நான் பூமியின் மேற்பரப்பைவிட்டே அவளை துடைத்து நீக்கி விடுகிறேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவனால் அதைச் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? அவர், “நீ போவதை அனுமதிக்க முடியாது. நீ ஒரு நல்ல தூதனாக இருந்து கொண்டு வந்திருக்கிறாய், ஆனால் நீ போவதை என்னால் அனுமதிக்க முடியாது” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 26“நீர் அவர்களை எண்ணிப் பார்த்தீரா?” “ஆம். நான் முழு இரவும் நெடுநேரமாக அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன்”. அவருடைய கண்ணானது சிட்டுக் குருவியின் மீதுள்ளது, அவர் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நானறிவேன். அவர் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் எவ்வளவு விசுவாசத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவு பெற்றுள்ளீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவு பெற்றுள்ளீர்கள் என்பதையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் எடுத்துக்கொள்ளும் நிலை என்ன வகையானது என்பதைக் காண அவர் விரும்புகிறார். அந்த வேளையானது இப்பொழுது வந்துள்ளது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர், “நான் முழு இரவும் நெடுநேரமாக அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ஜெபித்த ஒவ்வொரு ஜெபத்தையும் நான் கேட்டேன். தூதர்களாகிய நீங்கள் நல்ல தூதர்களாக இருந்து வருகிறீர்கள், ஆனால் நீங்கள் செல்வதற்கு நான் அனுமதிக்க முடியாது, நானே செல்லப் போகிறேன்” என்றார். ஆமென். அவர் தம்முடைய சிங்காசனத்தை விட்டு எழும்புவதை என்னால் காண முடிகிறது; ஆசாரிய வஸ்திரம் அவரைச் சுற்றிலும் தொங்குகிறது. “கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு காற்றுகளே, இங்கே வாருங்கள்” என்று அவர் கூறுவதை என்னால் காணமுடிகிறது. ஒவ்வொன்றும் அவருக்குக் கீழ்ப்படிகிறது. அப்பால் உள்ள வெண்மையான மின்னலே, எங்கே இருக்கிறாய், இங்கே வா என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அது அவருடைய சிங்காசனத்திற்கருகே வந்த போது, அதன்மீது ஏறி, ஓ, என்னே. அங்கே மேலே சென்று வளைந்து வளைந்து செல்லும் மின்னலைப் பிடித்து, ஜீவ விருட்சத்தினிடம் சென்று ஒரு இலையைப் பறித்தார். “என்ன காரியம்?” “இந்தக் காலையில் நான் பாபிலோனுக்கு சென்று கொண்டிருக்கிறேன். அங்கே என்னுடைய பிள்ளைகள் எனக்காக நிற்கின்றார்கள். நானும் அவர்களுக்காக நிற்கிறேன்” என்னே, என்னே. ஏறக்குறைய அந்த நேரத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று பேரும் அவர்களுடைய விசுவாசத்தினாலே கர்த்தருக்காக கடைசியான நிற்குதலை எடுத்துக் கொண்டவர்களாய் எரிகிற அக்கினிச் சூளையினுள் சென்றனர். அவர்கள் அக்கினியில் போடப்படும் ஏறக்குறைய அந்த சமயத்தில், தேவக்குமாரனைப் போன்ற நான்காவது ஆள் அங்கே நின்று காற்று வீசிக் கொண்டிருந்தார். ஓ, என்னே. அவருடைய கண்ணானது சிட்டுக்குருவியின் மீதும் உள்ளது. அவர் மூன்று பிள்ளைகளுக்காக மகிமையிலிருந்து பாபிலோனுக்கு வருவாரானால், இன்றிரவு இங்கே கட்டப்பட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்லாருக்காகவும் எவ்வளவு அதிகமாக அவர் போனிக்சுக்கு வருவார். வேளை வந்தது. பிதாவே, வேளை வந்தது. உங்களுக்கு வேளை வந்துள்ளது. நீங்கள் இப்பொழுதே உங்களுடைய தீர்மானத்தை செய்யப் போகிறீர்கள் 27ஒரு சமயம் பட்டணத்தின் வாசலில் உங்கார்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய நான்கு பையன்களுக்கு வேளை வந்தது. சீரியர்கள் எருசலேமை அல்லது சமாரியாவை முற்றுகையிட்டிருந்தனர். என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் அவர்கள் குஷ்டரோகத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. அவர்கள் பட்டணத்தின் வாசலுக்கு வெளியே இருந்தனர். அவர்கள், “நாம் மரிப்பது வரை ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?” என்றனர். ஆமென். “நாம் மரிப்பது வரை நாம் ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?” இந்தப் பட்டணத்தில், அவர்கள் ஒருவர் மற்றவரின் பிள்ளைகளை வேக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த காரியத்தை நீங்கள் நினைவு கூருங்கள். சீரியர்கள் எல்லாவற்றைச் சுற்றிலும் பாளயமிறங்கி, அவர்களைப் பட்டினியால்கொன்று வந்தனர். அவர்கள் இரண்டு பாதைகளில் என்னே, என்னே. ஏறக்குறைய அந்த நேரத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று பேரும் அவர்களுடைய விசுவாசத்தினாலே கர்த்தருக்காக கடைசியான நிற்குதலை எடுத்துக் கொண்டவர்களாய் எரிகிற அக்கினிச் சூளையினுள் சென்றனர். அவர்கள் அக்கினியில் போடப்படும் ஏறக்குறைய அந்த சமயத்தில், தேவக்குமாரனைப் போன்ற நான்காவது ஆள் அங்கே நின்று காற்று வீசிக் கொண்டிருந்தார். ஓ, என்னே. அவருடைய கண்ணானது சிட்டுக்குருவியின் மீதும் உள்ளது. அவர் மூன்று பிள்ளைகளுக்காக மகிமையிலிருந்து பாபிலோனுக்கு வருவாரானால், இன்றிரவு இங்கே கட்டப்பட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் எல்லாருக்காகவும் எவ்வளவு அதிகமாக அவர் போனிக்சுக்கு வருவார். வேளை வந்தது. பிதாவே, வேளை வந்தது. உங்களுக்கு வேளை வந்துள்ளது. நீங்கள் இப்பொழுதே உங்களுடைய தீர்மானத்தை செய்யப் போகிறீர்கள் 28ஒரு சமயம் பட்டணத்தின் வாசலில் உங்கார்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய நான்கு பையன்களுக்கு வேளை வந்தது. சீரியர்கள் எருசலேமை அல்லது சமாரியாவை முற்றுகையிட்டிருந்தனர். என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் அவர்கள் குஷ்டரோகத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. அவர்கள் பட்டணத்தின் வாசலுக்கு வெளியே இருந்தனர். அவர்கள், “நாம் மரிப்பது வரை ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?” என்றனர். ஆமென். “நாம் மரிப்பது வரை நாம் ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?” இந்தப் பட்டணத்தில், அவர்கள் ஒருவர் மற்றவரின் பிள்ளைகளை வேக வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த காரியத்தை நீங்கள் நினைவு கூருங்கள். சீரியர்கள் எல்லாவற்றைச் சுற்றிலும் பாளயமிறங்கி, அவர்களைப் பட்டினியால்கொன்று வந்தனர். அவர்கள் இரண்டு பாதைகளில் மாத்திரம் இருக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள், “நாம் பட்டணத்திற்குப் போவோமானால், அங்கே புசிக்க எதுவுமில்லை. நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாலும் நிச்சயமாக சாவோம்” என்றார்கள். இன்றிரவு உங்களில் அனேகரும் அதே இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மருத்துவரிடம் போனீர்கள். அவர் உங்களுக்காக தன்னால் இயன்ற அனைத்தும் செய்தார். நீங்கள் திரும்பினால், இனி மேலும் அவரால் எதுவும் செய்யமுடியாது; நீங்கள் சொன்னபடி அவர் செய்தார். எனவே ஏன் நீங்கள் மரிப்பதுவரை அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம் கொண்டிருந்தனர். அவர்கள் சத்துருவின் பாளயத்திற்கும் சென்று, அவர்கள் இவர்களை அழிக்காமல் விடுவார்களானால், அவர்கள் ஜீவித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களை கொன்று போடுவார்களானால், அவர்கள் எப்படியும் சாகத்தான் போகிறார்கள். அவர்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு சாகப் போவதாக இருந்தனர். எனவே அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்பினர். நாம் இதை பட்டினியால் மரித்து கொண்டிருக்கும் கூட்டம் என அழைக்கலாம். அவர்கள் ஒரு துரிதமான தீர்மானத்திற்கு வந்தனர். 29நீங்கள் இன்றிரவும் அதே வழியில் அதைக் கொண்டிருக்கத்தான் வேண்டும், இப்பொழுது ஒரு துரிதமான தீர்மானம். நீங்கள் யாரை சேவிப்பீர்கள் என்பதை இந்த நாளில் தெரிந்துக்கொள்ளுங்கள். தேவனை அவருடைய வார்த்தையில் பற்றிக்கொள்ளுங்கள். வார்த்தை போதிக்கப்பட்டுள்ளது; அடையாளங்கள் செய்யப்பட்டுள்ளன; பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், வேளை... ஜனங்களிடையே ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய அந்த வேளையானது வந்துள்ளது. தேவன் இதற்குமேலும் என்ன செய்ய இயலும்? அற்புத அடையாளங்களுடனும் பகுத்தறிதல்களுடனும் அதை கீழே அனுப்பி, விஞ்ஞானப்பூர்வமாக அதை நிரூபித்து, உலகத்தைச் சுற்றிலும் அதை அனுப்பினார். ஆயிரக்கணக்கான தடவைகள், ஆயிரக்கணக்கான சாட்சிகள் இருக்கின்றன. மற்றவர்கள் சுகமடைந்து கொண்டிருக்கின்றனர். உங்களைக் குறித்து என்ன? அவர்கள் நடுஇரவு நேரத்தில் விசுவாசத்தால் சீரியர்களின் சேனையை நோக்கி நடக்கத் துவங்கினர். தேவன் அவர்களுடைய விசுவாசத்தை கெளரவித்தார். ஒரு மகத்தான புயலானது வனாந்தரத்தில் ஒரு இடி முழுக்கத்துடன் வந்து, எல்லா சீரியர்களும் உடனடியாக ஓடிப்போகும்படி தேவன் செய்தார். அவர்கள் சரியாக செயல்படத் தொடங்கினார்கள். அவர்கள் சாப்பிடும்படி அதிகமானவற்றை பெற்றுக்கொண்டனர், சில மதுவகைகளை (wine) பெற்றுக்கொண்டனர், சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். என்னே, மேலும் அவர்கள் தங்களுடைய சொந்த ஜீவனை மாத்திரம் இரட்சிக்கவில்லை, ஆனால் அவர்கள் முழு பட்டணத்தையும் இரட்சித்தனர். இங்கேயுள்ள வியாதியஸ்தரான அனேக ஜனங்கள் இருதயக் கோளாறுடனும், காச நோயைக் கொண்டவர்களாகவும் (tubercular) இருக்கைகளில் கட்டப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். ஏன், இன்றிரவு நீங்களும் அப்படியில்லையா? நீங்கள் மரிப்பது வரை அங்கே ஏன் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்? நீங்கள் ஒரு தீர்மானம் செய்வதற்கான வேளை இப்பொழுதே வந்திருக்கிறது. தேவன் இதற்கு மேலும் அதைக் குறித்து எதையும் செய்ய முடியாது, அது உங்களைப் பொறுத்தது. நீங்கள் அந்தத் தீர்மானத்தை செய்ய வேண்டியதாயுள்ளது. “நாம் மரிப்பதுவரை இங்கே ஏன் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும்?” 30பாருங்கள், நீங்கள் கீழே செல்வதற்கு அழைக்கப்படவில்லை, நீங்கள் ஒரு சத்துருவின் பாளையத்திற்கு செல்லவும் வேண்டியதில்லை. நீங்கள் இன்றிரவு உங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிதாவின் வீட்டிற்கு வாருங்கள். நீங்கள் வரும்படி அவர் விரும்புகிறார். அவர் தம்முடைய குமாரனை அனுப்பினார்; அவர் மரித்தார்; அவர் உங்களுடைய சுகமாக்குதலுக்காக கிரயத்தை செலுத்தித் தீர்த்து விட்டார். நீங்கள் உங்களுடைய தீர்மானத்தை செய்வதற்கான வேளை இப்பொழுதே வந்துள்ளது. ஆமென். வேளை வந்தது. ஒரு சமயம் அனேக வருஷங்களாக உதிரப்போக்கைக் கொண்ட ஒரு சிறிய ஸ்திரீ அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள். இரத்தமானது அவளிடமிருந்து போய்க் கொண்டிருந்தது, அவளால் அதை நிறுத்த முடியவில்லை. அவள் தன்னுடைய ஜீவனத்துக்கான எல்லாவற்றையும் வைத்தியர்களுக்கு செலவழித்தாள், அவர்கள் நல்ல எதையும் அவளுக்குச் செய்ய முடியவில்லை. அவள் தன்னுடைய இருதயத்தில், “நான் அந்த மனிதரை மாத்திரம் பார்க்க முடிந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட முடியுமானால், நான் சுகமடைவேன்” என்றாள். 31இறுதியில் வேளை வந்தது. அவர்கள் ஒரு சத்தத்தை அங்கே கீழே கேட்டார்கள், அப்படியே ஒரு படகு வந்திறங்கியது. என்னே, அந்த சிறு ஸ்திரீ இங்கே வந்து அவரை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். அது என்ன? அங்கே வேளை வந்தது; அவளுக்கான வாய்ப்பு அங்கே இருந்தது. மேலும் அவள் ஜனக்கூட்டத்தினூடாக நெருக்கிக் கொண்டு இங்கே வருகிறாள். வயதான ஜனங்களாகிய அவர்கள், “பின்னாக போ. அவர்கள் உன்னை ஆலயத்தை விட்டு துரத்தி விடுவார்கள்” என்று கூறினார்கள். அவள் நெருக்கிக் கொண்டு சென்றான். அவர்கள் யாரும் அவளை நிறுத்த முடியவில்லை . அவர்களில் சிலர், “அற்புதங்களின் நாட்கள் சென்று விட்டன” என்றனர். அது அவளை நிறுத்தவில்லை . அவள் நெருக்கிக் கொண்டு சென்றாள். (அருடைய வஸ்திரத்தின் ஓரத்தை) தொடும்படியான வேளை அவளுக்கு வந்தது. அதுவே எல்லாமுமாக இருந்தது. அவளுடைய இருதயத்தின் வாஞ்சையை அவள் பெற்றுக்கொள்ளும் வரையில், எப்படியாயினும் அவள் பெற்றுக்கொள்ளும்படி அவள் சரியாக அவர்களுடைய பாதங்களுக்கு இடையே சென்றாள். அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனடியாக உதிர போக்கு நின்று போயிற்று (ஆமென்). வேளை வந்துவிட்டிருந்தது. ஆமென். வேளை வந்தது. நாம் அதன் மேல் பேசுவதற்கு அப்படியே சிறிது நேரமே கொண்டுள்ளோம், ஆனால் நான் இப்பொழுது நிறுத்த வேண்டியவனாக உள்ளேன். 32பாருங்கள். இப்பொழுது வேளை வந்தது, நீங்கள் ஒரு தீர்மானத்தை செய்ய வேண்டியவர்களாயிருக் கிறீர்கள். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்படியான இந்த சவாலை உங்களில் யாரிடமும் வைக்கிறேன், உங்களது கோளாறு என்னவென்பது காரியமல்ல, நீங்கள் உங்களுடைய இருதயத்தை தேவனுடன் சரிசெய்து, நீங்கள் அவரை சேவிப்பீர்களென்று தேவனிடம் வாக்குக்கொடுப்பீர்களானால், அப்பொழுது தேவனை அவருடைய வார்த்தையில் பற்றிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் கொண்டிருக்கிற விளைபயனைக் குறித்து எந்த கவனமும் செலுத்த வேண்டாம், அப்படியே விசுவாசியுங்கள், தேவன் அதை சம்பவிக்கப்பண்ணுவார். “நீங்கள் விரும்பும் காரியங்கள் எதுவாயிருந்தாலும், நீங்கள் அவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று ஜெபித்து விசுவாசிக்கும் போது அவைகள் உங்களுக்கு அளிக்கப்படும்”. நீங்கள் அவைகளை பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசிப்பீர்களானால் நீங்கள் அவைகளைக் கொண்டிருப்பீர்கள். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? வேளையானது இங்கே இருக்கிறது. இயேசு, “பிதாவே, வேளை வந்தது.... அல்லது, அந்த நேரம் வந்தது” என்றார். உலகம் பரியாசக்காரர்களால் நிறைந்திருக்கும் போது அந்த வேளை வருகிறது, வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவ பிரியராயிராமல் சுகபோகபிரியர், இணங்காதவர்கள், இச்சையடக்கமில்லாதவர்கள், கொடுமையுள்ளவர்கள், நல்லோரை பகைக்கிறவர் களாயிருப்பார்களென்று. என்றாலும் வேளை வந்தது. விசுவாசிக் கிறவர்களை அடையாளங்களை பின்தொடரும், வேளை வருகிறது. சபையானது மேலே செல்வதற்கு அல்லது பின்வாங்கி போவதற்கு வேளை வருகிறது. நீங்கள் உங்கள் தீர்மானத்தை செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். அது சரியா? வேளை வந்தது. 33இப்பொழுது இந்த எழுப்புதலானது நெருங்கி வரும் சமயத்தில் வேளை வருகிறது. அன்புள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, என் முழு இருதயத்தோடும் உங்களை நேசிக்கிறேன், நீங்கள் சுகமடையும்படியான இடத்திற்கு உங்கள் விசுவாசத்தைக் கொண்டு வரும்படி நம்முடைய கர்த்தராகிய இயேசு வேறு ஏதாவதொன்றைச் செய்யக் கூடுமா என்பது எனக்குத் தெரியவில்லை . அது சரியா? நினைவில் கொள்ளுங்கள், அவருடைய ஊழியத்தின் நாட்களில், வளைந்த உறுப்புகள் கொண்டவர்களும், குருடானவர்களும் மற்றும் ஒவ்வொன்றையும் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான நூற்றுக்கணக்கான ஜனங்களை அவர் கடந்து சென்று விட்டார், அவர்களைத் தாண்டி சென்று விட்டார், ஏனெனில் சுகமாக்கப்படும்படி போதிய விசுவாசத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர் பெதஸ்தா குளத்தினருகில் படுத்துக்கொண்டிருந்த முடமான, செயலற்றிருந்த, குருடான நிலையிலிருந்த மகத்தான கூட்டத்தினரை விட்டு நடந்து சென்றுவிட்டார், ஆனால் முப்பத்தெட்டு வருஷமாக சுகவீனத்தைக் கொண்டிருந்த ஒரு மனிதனை சுகமாக்கிவிட்டு கூட்டத்தினரைக் கடந்து சென்று விட்டார். அது சரியா? பரிசுத்த யோவான் 5. அவர்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அவர், “ஏன், பிதா செய்வதை குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் தாமாகச் செய்யமாட்டார். பிதா என்னவெல்லாம் செய்கிறாரோ, அவைகளை அவர் குமாரனுக்குக் காண்பிக்கிறார். பிதா ஏற்கனவே செய்தவைகளையே குமாரனும் செய்கிறார்” என்றார். இப்பொழுது, என்ன சம்பவிக்கிறது? அந்த மனிதர் விசுவாசித்தார். அவர்கள் விசுவாசித்தனர். அவர்கள் அதை ஏற்றுக் கொள்கின்றனர். அதன்பிறகு தேவன் தம்முடைய குமாரனுக்கு தரிசனத்தைக் காண்பிக்கிறார். அவருடைய குமாரன் அதை வெளிப்படுத்துகிறார். மேலும் அவர், “இப்பொழுது, நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியால் நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்” என்றார். அது சரியா? இப்பொழுது, அதே அற்புதங்களும் அடையாளங்களும் இங்கே உள்ளன. நாம் அப்படியே முடிக்கப் போகிறோம், ஏனெனில் இது காலதாமதமாகி விட்டது. இந்த அதிக நேரத்தை நான் எடுத்துக்கொண்டதற்காக நான் வருந்துகிறேன். 34இப்பொழுது, அன்புள்ள நண்பர்களே, பாருங்கள், இன்றிரவு மீண்டும் இங்கே இப்பொழுது அந்த வேளை வந்துள்ளது. ஒரு தீர்மானத்திற்கான நேரம் வந்துள்ளது. இந்த அனேக ஜனங்களை நான் அழைக்கும் போது நேரமானது வந்துள்ளது. என்னுடைய சிறு பையன், “அப்பா, நான் அப்படியே என்னுடைய இரண்டு பாக்கெட் முழுவதும் ஜெப அட்டைகளால் நிரப்பி, வெளியே ஒவ்வொரு இடங்களிலும் அவர்களுக்குக் கொடுத்து விட்டேன்” என்றான். சரி. இப்பொழுது நீங்களெல்லாரும் சுகமடைவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தேவன் உங்களுக்கு உதவி செய்யப் போகிறார் என்று என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். ஸ்திரியே, அந்த குழந்தைக்காக, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சிறு பையனே, நீ விசுவாசிக்கிறாயா? இங்கேயே சுகமாக விரும்புகிறாயா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஸ்திரீயே, உங்களைக் குறித்து என்ன, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அங்கேயிருக்கும் உங்களைத்தான், நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்; நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் முழுஇருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த வழியினூடாக கீழே இருப்பவர்கள், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 35இப்பொழுது, பாருங்கள். நீங்கள் இதைச் செய்யுங்கள்: நீங்கள் செய்யுங்கள்... இந்த வேளை பவுல், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல நீங்களும் என்னை பின்பற்றுபவர்களாக இருங்கள்” என்றான். அந்த இரவு என்னிடம் வந்த தேவனுடைய ஆவியானவர், வியாதிப்பட்டுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்கும்படியாகவே நான் இந்த உலகத்தில் பிறந்திருப்பதாக என்னிடம் கூறியிருக்கிற காரணத்தினால் (பாருங்கள்), நான் உலகத்தைச் சுற்றிலுமுள்ள வியாதிப்பட்டுள்ள ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டியதாக உள்ளது. (இப்பொழுது உலகத்தைச் சுற்றிலும் அனுபவபூர்வமான இருக்கிற ஒரு பிரயாணத்தை நான் செய்ய இருக்கிறேன்). நான் வியாதியாயுள்ள ஜனங்களுக்காக ஜெபிப்பது போன்று அவர் கூறினார். அதைக் குறித்து வேறு எதுவும் கூறியிருக்கவில்லை. வேதாகமமானது, “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறுகிறது. இயேசு தம்முடைய வார்த்தையை அனுப்பி, அவர் அனேக வழிகளில் வியாதியஸ்தரை சுகமாக்கினார். அதன் பிறகு நான், அவர்கள் என்னை விசுவாசிக்க மாட்டார்களே என்று கேள்வி கேட்ட பொழுது, அவரோ, “தீர்க்கதரிசியாகிய மோசேக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்பட்டது போல, உனக்கும் இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்படும்” என்றார். இப்பொழுது, நான் அதைக் கூறுவதென்பது எளிதான காரியமல்ல, ஏனெனில் அது.... நான் அந்த தூதனை அவருடைய வார்த்தையில் சார்ந்து கொள்ள வேண்டியவனாயிருந்தேன். மேலும் நான் அவரை அவருடைய வார்த்தையில் பற்றிக்கொண்டேன். அவர் அதே காரியத்தை உறுதிபடுத்திக் கொண்டே இருக்கிறார். 36மேலும் இங்கேயிருக்கும் ஜனங்களாகிய உங்களை நான் நேசிக்கிறேன். வியாதியஸ்தராயிருந்து இங்யே வந்து இங்கே வெளியே படுத்துக் கொண்டிருக்கிறவர்களாகிய நீங்கள் எங்களுக்கு அருகில் இருப்பதை நான் காணவும் அறியவும் செய்வதை நான் விரும்புகிறேன்.... வெப்பத்தடுப்புக்கூரை மற்றும் அதனைச் சுற்றிலுமிருந்து கொண்டு காசநோய் மற்றும் பல வியாதிகளினின்றும் விடுதலை பெற முயற்சிக்கும் உங்களை, எப்படியாக நான்... என்னுடைய இருதயம் உங்களுக்காக ஊக்கமடைகிறது. உங்களை சுகமடைந்தவர்களாக காண நான் எப்படியாய் விரும்புகிறேன். இப்பொழுது, இன்றிரவு தயவு செய்து விசுவாசியுங்கள், இயேசு கிறிஸ்து இங்கே இருந்து சரியாக இங்கே நின்று இந்த முழு கூட்டத்தினருக்காக ஜெபத்தை செய்து, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரே இசைவுடன் அதை விசுவாசிப்பீர்களானால், தேவன் இந்தக் கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு நபரையும் சுகப்படுத்துவார். அவர் அதைச் செய்வார். 37இப்பொழுது, நான் ஜெப வரிசையைக் கொண்டிருந்து, சில ஜனங்களை மேலே அழைத்து, அவர்களுக்காக ஜெபிக்கப் போகிறேன். எனக்குத் தெரியாது, இன்றிரவு என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் சொல்லுகிறாரோ நான் அதை அப்படியே செய்யப் போகிறேன். எப்படியென்று எனக்குத் தெரியாது... எத்தனை பேர்கள் ஜெபிக்க விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களைப் பார்ப்போம்? என்னே, என்னே. அனேகர், நூற்றுக்கணக்கானவர்கள். இப்பொழுது, பாருங்கள், அன்புள்ள நண்பர்களே, நான்நான்... நான் அப்படியே கீழே வந்து இங்குள்ள உங்கள் ஒவ்வொருவரையும் மேடையின் மேல் கொண்டு வந்து இங்கே உங்களுடன் நிற்க எனக்குப் பிரியம். அது விசுவாசத்தைக் கொண்டு வரும் என்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன். நிச்சயமாக அது செய்கிறது. அது விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. நீங்கள் உங்களுடைய கோளாறுகளையும் மற்றவைகளையும் கூறும்போது, சிலசமயங்களில் உங்கள் ஜீவியத்தில் பின்னால் நிகழ்ந்த காரியங்கள் மற்றும் நீங்கள் செய்திருந்த காரியங்களைக் கூறும்போது, அது விசுவாசத்தைக் கொண்டு வருகிறது. ஆனால் இங்கே மேடையிலிருக்கும் இவர்கள் மீது தேவன் கொண்டிருக்கும் அதே மனப்பான்மையையே, அங்கே வெளியே இருக்கும் உங்கள் மீதும் கொண்டிருப்பார். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? இப்பொழுது, ஒவ்வொருவரும் உத்தமமாயிருங்கள். எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்துடனும் விசுவாசித்து, தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று அங்கே வெளியே ஜெபித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? சரி! அவர் இப்பொழுதே செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். 38நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அங்கே இசைக்கருவியை இசைக்கும் சகோதரி அல்லது சகோதரன் யாராயிருந்தாலும், நீங்கள் விரும்பினால் இப்பொழுதே, “என்னுடன் தங்கியிரும்” என்ற பாடலை இசைக்கும்படி தான் விரும்புகிறேன். கர்த்தருடைய தூதன் இப்பொழுது அருகில் இருப்பதை நான் அப்படியே உணருகிறேன். எங்கள் பரலோக பிதாவே, அன்புள்ள இயேசுவே, நாங்கள் இன்றிரவு உம்மிடத்தில் அன்பு கூருகிறோம். நாங்கள் மிக அதிகமாக உம்மை நேசிக்கிறோம். நீர் முந்தி எங்களில் அன்பு கூர்ந்து, உம்மைத்தாமே எங்களுக்காகக் கொடுத்தீர். மேலும் இப்பொழுது, இன்றிரவு, உம்முடைய இரத்தத்தால் வாங்கப்பட்ட அனேக ஏழ்மையான, வியாதிப்பட்ட, ஊனமான ஜனங்கள் எனக்கு முன்பாக இங்கே இருக்கிறார்கள். கர்த்தாவே, நீர் உதவி செய்யவில்லையென்றால், அவர்களில் அனேகர் ஒரு சில தினங்களில் இங்கே இருக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் அந்த திரைக்கப்பால் கடந்து செல்ல வேண்டியிருக்கும். பிதாவே, அவர்களை இரட்சியும் என்று இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாமலிருந்தால், அவர்களை இரட்சித்து நீர் அவர்களை மகிமையில் வீட்டிற்கு எடுத்துக் கொள்ளும். மேலும் பிதாவே, இன்றிரவு உம்முடைய ஜனங்களுக்கு உம்முடைய ஆவியானவரால் நான் ஊழியம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் எப்படியாவது அதைக் கண்டு தங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்; மேலும் இது ஒரு மகத்தான இரவாக இருப்பதாக. பிதாவே இங்கே இந்த இருக்கைகளிலும், கக்கதண்டங்களிலும், தூக்குப்படுக்கைகளிலும் கட்டில்களிலும் கட்டப்பட்டிருப்பவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். மேலும், கர்த்தாவே, நீர் உண்மையிலேயே வியாதியஸ்தராயுள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் அறிகிறீர். அவர்களுக்கு முன்பாக எனக்கு தயவு கிடைக்கச்செய்யும், நீர் அதைச் செய்வீரா, கர்த்தாவே? அவர்கள், “நல்லது, அதற்காக நான் அவருடைய வார்த்தையை பற்றிக்கொள்வேன்” என்று அப்படியே கூறுவார்களாக. கர்த்தாவே, இது உம்முடைய வார்த்தை, என்னுடையதல்ல என்பதை நான் அவர்களுக்கு கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்றிரவு இதைஅளியும், பிதாவே, உம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மகிமைக்காக மகத்தான காரியங்கள் செய்து முடிக்கப்படுவதாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 39சரி பில்லிபால் உள்ளே இருக்கிறானா? என்ன? நீ எத்தனை ஜெப அட்டைகளைக் கொடுத்தாய்? நூறா? அந்த எழுத்து என்ன? சரி நாம் என்ன செய்ய வேண்டுமென்று நான் உங்களுக்கு கூறுவேன், 7 என்ற எழுத்தில் தொடங்குங்கள். அவர்கள் இன்று கொடுத்த எழுத்து 2. ஒவ்வொரு நாளும் நாம் அனேக (ஜெப அட்டைகளைக்) கொடுக்கிறோம். பிறகு நான் ஜெபிக்காமல் விட்டவர்களை சகோதரன் ஹாலும் (Brother Hall) மற்றவர்களும் அடுத்த நாள் அவர்களிடம் சென்று, அவர்களெல்லாருக்காகவும் ஜெபிக்கிறார்கள். மேலும் பிறகு ஒவ்வொரு இரவும், நாம் புதிய ஜெப அட்டைகளைக் கொடுக்கிறோம். சகோதரியே, உங்களுக்குப் பிரியமானால், நான் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அப்படியே தொடர்ந்து இசைத்துக் கொண்டிருங்கள். நான் அப்படியே அந்தப் பகுதியை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? “என்னுடன் தங்கியிரும்”. அவர் நம்முடன் தங்கியிருப்பார் என்பதை தேவன் அருளுவாராக. 40இப்பொழுது, இங்கே உள்ளே மற்றும் அங்கே வெளியே இருக்கும் ஜனங்களாகிய நீங்களெல்லாரும், நீங்கள் எங்கிருந்தாலும் நான் விரும்புகிறேன்... இப்பொழுது, உங்களுடைய ஜெப அட்டை அழைக்கப்பட்டால், வரிசையாக வந்து நிற்கும்படி நான் விரும்புகிறேன். அப்படி இல்லையென்றால்: அது அழைக்கப்படுவது வரை, அப்படியே உங்கள் இடத்திலேயே தரித்திருந்து, காத்திருங்கள். உத்தமமாய் இருங்கள். மேலும் அப்போது அப்படியே ஜெபித்துக் கொண்டிருங்கள். அப்படியே ஜெபத்தில் தரித்திருங்கள். “தேவனே, கூறின ஒவ்வொன்றையும் நான் விசுவாசிக்கிறேன். நான் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிறேன். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். மேலும் சகோ. பிரான்ஹாம் என்னிடம் கூறினவை சத்தியமென்று நான் விசுவாசிக்கிறேன். நான் சரியாக இப்பொழுதே சுகமடைந்து நலமடையப் போகிறேன் என்று விசுவாசிக்கப் போகிறேன்” என்று கூறுங்கள். மேலும் இப்பொழுது, சுற்றிலுமிருக்கும் உங்களில் மீதியானவர்களும், வெளியே இருக்கும் நீங்கள், இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இதைச் செய்ய என்னை அனுமதியுங்கள், ஏனெனில் நான் இதைச் செய்து கொண்டிருப்பது உண்மையிலேயே சட்டபூர்வமானதாகும். நான் குற்றம் கண்டுபிடிப்பவர்களுக்குப் பொறுப்பல்ல, ஏனெனில் இந்த வியாதிகள் சரியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு போகிறது. நீங்கள் அதை அறிவீர்கள்... அது உண்மையாய் இருக்கப்போகிறதென்று எத்தனை பேர் அறிவீர்கள்? மற்ற கூட்டங்களில் இருந்ததைக் கண்டுள்ளீர்கள்..... அவைகள் சரியாக ஒருவரிடமிருந்து மற்றவரிடத்திற்கு செல்கிறது. எனவே இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், புற்றுநோய் அல்லது அது எதுவாக இருந்தாலும் அல்லது காக்காய் வலிப்பு அல்லது ஏதோவொன்று வரிசையில் வந்து கொண்டிருக்கிறது, அது... நீங்கள் உத்தமமாக இல்லையென்றால், நான்- நான் பொறுப்பல்ல. மேலும் நீங்கள் வியாதியஸ்தரை மேடையின் மேல் கொண்டு வருகிறீர்கள், ஆனால் அது ஒரு உத்தமமற்ற ஆவியாக இருந்தால், அது - அது நிச்சயமாகவே வெளியே வராது. அது சரியே. ஏனெனில் அவர், “நீ உன்னை ஜனங்கள் விசுவாசிக்கும்படி செய்யக்கூடுமானால், பிறகு கேட்பதற்கும் அவர் அதை செய்வார் என்று அதை விசுவாசிப்பதற்கும் நான் என் பரலோக பிதாவிடமிருந்து அதிகாரம் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த வியாதியஸ்தர் உத்தமமின்றி இருந்தால், அது எல்லாவற்றிற்கும் எனக்கு அதிகாரமோ விசுவாசமோ கிடையாது. பாருங்கள்? அது உத்தமமாய் இருப்பவர்களாயுள்ளது. எனவே அது என்னவாக இருந்தது? நீங்கள் தயவு செய்து இப்பொழுது ஜெபிப்பீர்களா?... 41ஒவ்வொருவரும் இப்பொழுது ஜெபத்தில் இருப்பீர்களா? நாம் அப்படியே அங்கே துவங்குவோமாக. எண்-1 இலிருந்து ஆரம்பிக்கலாம், எண்-1 இலிருந்து தொடங்கி இங்கே வரிசையில் நில்லுங்கள். எண்-1 ஜெப அட்டை. அருமை. அடுத்ததாக டிஎண்-2, எண்-3, எண்-4, எண்-5, கீழாக, எண்-6, எண்-7, எண்-8. சகோதரன் வீரிட் (Brother Sharritt), அங்கே கீழே எத்தனை பேர் இருக்க முடியும்? ஏறக்குறைய பத்து அல்லது பதினைந்து அங்கே கீழே ஏதோவொரிடத்தில் வரிசையில் நிற்கச் செய்யுங்கள். சரி, ஒவ்வொருவரும் உத்தமமாயிருங்கள். முதல் பத்து பேரை எடுத்துக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் அவர்ளெல்லாரையும் கொண்டுவர வேண்டியதில்லை.... ஒவ்வொருவரும் அதிக நேரம் நிற்க வேண்டியிருக்கிறது, ஏனெனில் நாம் அபூர்வமாக எப்பொழுதாவது அதன் மீதாக வருகிறோம். ஆம். ஆம், ஐயா. உங்களுக்கு நன்றி, சகோதரனே. சரி....?... பில்லி, இங்கே இந்த எல்லாரையும் கட்டுப்படுத்து. அவர்களில் சிலர் சரியாக கேட்கக்கூடாதவர்கள் ஆகவும் மற்றும் காரியங்களாகவும் உள்ளது. இந்த ஊனமாக ஜனங்களில் யாராவது இங்கே அவைகளை பெற்றிருந்தால், இவைகளினூடாக நோக்கிப் பாருங்கள். அவர்கள் கொண்டிருந்தால், இவைகளினூடாக நோக்கிப் பாருங்கள். அவர்கள் கொண்டிருந்தால், நீ அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களைப் பிடித்துக் கொள். Z-1 முதல் Z-10 வரை அல்லது 15 வரை, அங்கே உள்ளே ஏதோவொரு இடத்தில் அவர்களெல்லாரையும் கட்டுப்படுத்து. 42நான் இரண்டு அல்லது மூன்று இரவுகளாக இங்கே அழைத்துக் கொண்டிருந்து, இங்கேயிருக்கும் யாரோ ஒருவர் படுக்கையிலிருந்து எழும்புவதைக் காண விரும்பினேன், மேலும் நான்.... அது சுயநலமாக இருக்கலாம். நான் இப்பொழுதே அதைச் செய்ய எதிர்பார்க்காமல் இருக்கலாம், தேவன் மன்னிப்பாராக.... (ஒலிநாடாவில் காலியிடம்- ஆசிரியர்) உண்மையாகவே உத்தமமாயிருந்து, இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் கனம் பண்ணுங்கள் (respecting). சரி. இப்பொழுது, சிலர்... அவர்கள் வந்து சேர்ந்திருந்தால்..... நான் அங்கே அனேகம் பேரை எழும்பப்பண்ணினேனா? சரி. நாம். சில சமயங்களில் நாம்... அது- அது மெதுவாக உள்ளது, அப்படியே சிறிது நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அது இன்றிரவு நிச்சயமாகவே சிறிது வினோதமாக இருக்கப் போகிறது. என்னுடைய ஊழியக்கார சகோதரர்கள் இங்கே மேடையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அதைக்குறித்து நினைவுடன் இருப்பேன்; அவர்கள் தேவனுடைய மனிதர்களாயிருக்கிறார்கள். 43ஆனால் நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா... இங்கே பாருங்கள் நண்பர்களே, இந்த பக்கத்திலிருந்து ஆவிகள் வந்து கொண்டிருக்கின்றன, இந்த பக்கத்திலிருந்து ஆவிகள் வந்து கொண்டிருக்கின்றன, இங்கே ஆவிகள் வந்து கொண்டிருக்கின்றன, இங்கே ஆவிகள் வந்து கொண்டிருக்கின்றன. பலமுள்ள அவைகள் ஒன்றாக கலந்து விடுவது எளிதாக உள்ளது. நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா? அது அப்படித்தான் உள்ளது. நாம் கூட கொண்டிருக்கிறோம்... நீங்கள் கவனியுங்கள், இரவு நேரத்தில் நான் வழக்கமாக இந்த ஒரு வழியில் அவர்களிடம் பேசும்படி சுற்றிலும் அமைதிக்குத் திரும்புகிறேன். என்னுடைய முதுகை உங்களெல்லாருக்கும் காட்டுவதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? அது உண்மை. நீங்கள் இன்றிரவு இங்கே நின்று கொண்டிருந்து ஜெபித்துக் கொண்டிருக்கும்படி நான் விரும்புகிறேன். தேவன் உங்களை சுகமாக்கப்பபோகிறார் என்று உங்கள் முழுஇருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று ஜெப வரிசையில் அங்கே கீழே நிற்கிற உங்களில் ஒவ்வொருவரிடமும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சரி. 44நேராக வாருங்கள், சகோதரனே. இங்கே வாருங்கள், ஐயா... உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும் உங்களை ஒரு பூரண மனிதனாக்க அவர் மரித்தார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி....?... நீங்கள் மோசமான அனேக காரியங்களை பெற்றுள்ளீர்கள். ஒரு காரியம் உங்கள் கண்கள் மோசமாகிக் கொண்டே போகிறது....?... அது கடினமாக இருக்கிறது. கண் விழிகள் கடினமாகிக் கொண்டே போகிறது. கண்ணில் உள்ள நரம்பானது கடினமாகிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது செய்து கொண்டிருப்பது அது தான். நான்... இப்பொழுது, என் சகோதரனே, நான் அவரிடம் கேட்டால், அவர் உம்முடைய விண்ணப்பத்தை அருளுவார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நல்லது, நீர் அதை விசுவாசிக்கிறீரா? சரி, ஒவ்வொரு இடத்திலும் நம்முடைய தலைகளை நாம் வணங்குவோம். அன்புள்ள பரலோக பிதாவே, ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல ஈவுகளையும் தருபவரே, இந்த மனிதர் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பி, அவரை சுகப்படுத்தும். அவர் தம்முடைய ஆசீர்வாதங்களைப் இப்பொழுதே பெற்றுக் கொண்டு, மேடையை விட்டு சுகமடைந்தவராக செல்வாராக, இதை உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். சரி, சகோதரனே. வீட்டிற்கு செல்லுங்கள்...?... நாம், “தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லுவோம். இப்பொழுது, ஒவ்வொருவரும் உத்தமமாயிருங்கள். 45நீங்கள் விரும்பினால், சகோதரர்களாகிய நீங்கள் ஜெபத்தில் இருங்கள். அது ஒருவகையான அதிகமான கடினத்தை உண்டாக்குகிறது. நான் முயற்சிக்கவில்லை... நான் அதிக சுயநினைவுடன் இருக்கிறேன்... சகோதரர்களாகிய நீங்கள் விசுவாசிக்கிற பிரகாரம், தேவன் அறிவார், நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் மனிதர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு ஆவியைப் பெற்றுள்ளீர்கள். மேலும் அந்த ஆவியானது அதைப்போன்று ஒவ்வொரு வழியிலும் அசைந்து கொண்டிருக்கிறது. அது...?... சரி, ஸ்திரீயே. நீங்கள் இப்பொழுது வாருங்கள். சகோதரியே, நீங்கள் வலதுபுறமாக இந்த வழியில் நோக்கிப் பார்க்கும்படி நான் விரும்புகிறேன். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னை விசுவாசிக்கும்படி நான் விரும்புகிறேன். இது ஒரு வகையாக சிறிது கடினமாக உள்ளது. நான் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய வழியில் அதை பெற முடியவில்லை. நீங்கள் காண்கிறீர்களா? மேலும் நீங்கள் என்னை விசுவாசிக்கும்படி நான் - நான் விரும்புகிறேன். நீங்கள் அறிவீர்கள், அனேக தடவைகள் நம்முடைய எஜமான்.... சில நேரங்களில் அவர் ஒரு மனிதனை கரத்தில் எடுத்து, ஜனக்கூட்டத்தை விட்டு வெளியே அவனை வழிநடத்தி, பட்டணத்திற்கு வெளியே சென்று, அங்கே வெளியே நின்று, அவனிடம் பேசினார். அதை நினைவு கூருகிறீர்களா? பாருங்கள்? ஒரு சமயம், அங்கே உள்ளே ஒரு முழு ஜனக்கூட்டம் இருந்தது, அவர்கள் எல்லாரும் அழுது கொண்டும் கலங்கிக் கொண்டும், குழப்பமடைந்தும் இருந்தனர். ஒரு சிறு பெண் அப்பொழுதுதான் மரித்திருந்தாள். ஜனங்கள் எல்லோரும் அதைக்குறித்து குழப்பமடைந்திருந்தனர். இயேசு அவர்கள் ஒவ்வொருவரையும் வீட்டிற்கு வெளியே போகச் செய்து, அவருடைய சீஷர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானுடன் பெண்ணின் தாய் மற்றும் தகப்பனை அழைத்துக் கொண்டு அறைக்குள் நடந்து, சிறு பெண்ணை கரங்களில் எடுத்து, அவளுடைய ஜீவனை திரும்ப அழைத்தார். நீங்கள் அதை நினைவு கூருகிறீர்களா? 46நல்லது பிறகு, தொற்காள் மரித்த போதும் பரிசுத்த பேதுருவின் அனுபவம் அதுவாக தான் இருந்தது. நீங்கள் அதை நினைவு கூருகிறீர்களா? அங்கே இருந்த விதவைகள் அனைவரும் அழுது கொண்டிருந்தனர், ஏனெனில் அவள் அவர்களுக்கு அதிகமாக இரக்கம் செய்திருந்தாள். பேதுரு உள்ளே வந்து அவர்களெல்லாரும் அழுது கொண்டிருப் பவர்களாகக் கண்டான்; அவன் அவர்களை வீட்டை விட்டு வெளியே வரச் செய்தான், எனவே செய்யும்படி தேவன் விரும்பினதை அவனால் கண்டுகொள்ள முடிந்தது. பாருங்கள்? நல்லது இப்பொழுது, இங்கே அது இருக்கிறத. நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு, அந்த வரிசையில் வர விரும்புகின்றனர். பாருங்கள்? அவர் அவர்களைப் பெற்றுக் கொள்வது...?... பாருங்கள்? மேலும் இது அதை கடினமாக்குகிறது. அந்த எஜமான் (இயேசு - தமிழாக்கியோன்) கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயிடம் பேசினது போன்று நானும் அப்படியே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, நாம் அன்னியர்கள், இல்லையா சகோதரியே. நாம் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. நாம் ஜீவயத்தில் அன்னியர்களாயிருக்கிறோம். உங்கள் ஜீவியத்தைக் குறித்து ஏதாவதொன்று அறிய வேண்டுமானால், அது இயற்கைக்கு மேம்பட்டதனூடாக வர வேண்டியதாயிருக்கிறது. அது சரியா? 47நீங்கள் ஒரு கிறிஸ்தவரென்று நான்-நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஸ்திரீயாக இருக்கிறீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், சில காலமாக நீங்கள் அவ்வாறு இருந்து வருகிறீர்கள். நீங்கள் ஒரு காரியத்திற்காக அதிகமாக அஞ்சுகிறீர்கள். உங்கள் நரம்புக் கோளாறானது ஒரு வகையான நரம்புக் கோளாறாக இருக்கிறது, ஒரு கவலை கொள்கிற நரம்புக் கோளாறு. அது சரியா? மற்ற ஜனங்களின் பிரச்சனைகளை மிகவும் கவனம் எடுக்கிற குறிப்பிடத்தக்க நபராக நீங்கள் இருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் அவர்களை அடைந்து அதை அழைப்பதற்கு முன்பதாக சில பாலங்களை நீங்கள் கடக்கிறீர்கள். அது சரியா? இப்பொழுது பாருங்கள், அது எப்பொழுதும் சம்பவிக்கிறது..... அதைப்போன்று ஏதோவொன்று உங்களைத் தடுத்து நிறுத்துகிறது, ஏனெனில் நீங்கள் திட்டமிடுகிறீர்கள், அது அந்த வழியாக வெளியே வருவதில்லை. ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறதென்று உங்கள் மனதில் நீங்கள் எண்ணுகிறீர்கள், அது சம்பவிப்பதில்லை, அது அப்படியே அந்த வழியை எடுத்துக் கொள்கிறது. அது சரியா? மேலும் நீங்கள்.... இப்பொழுது, அது சந்று நேரம் என்னை நிறுத்தியது. அது ஒருவகையாக கடினமாக உள்ளது. இப்பொழுது, தயவு செய்து ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். இப்பொழுது, சகோதரியே, அப்படியே இந்த வழியாக நோக்கிப்பாருங்கள். நான் அப்படியே உங்கள் ஆவியுடன் தொடர்புகொள்ள, உங்களிடம் பேசும்படி விரும்புகிறேன். (பாருங்கள்?) ஒரு பிள்ளையிடமிருந்து வருகிற ஒரு தரிசனத்தை நான் காண்கிறேன், ஒரு சிறு பெண்ணிடமிருந்து. நான் நான்.... அது அப்படியே.. அது வருகிறபடி நான் அதைப் பேச வேண்டும் (நீங்கள் பாருங்கள்?) அல்லது நான்- நான் அதைப் பெற்றுக் கொள்ளமாட்டேன். இப்பொழுது, அப்படியே ஜெபத்தில் தரித்திருங்கள். 48ஏதோவொன்று இங்கே இருக்கிறதை நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள், இல்லையா? நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்கள். அது கர்த்தருடைய ஆவியாக இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், பெருமாட்டியே. அது இப்பொழுது மீண்டும் திரும்பி வருவதை நான் காண்கிறேன். ஒ, ஆம், நீங்கள்- நீங்கள் எதோவொன்றைக் கொண்டிருக்கிறீர்கள்... அது உங்களுடைய.... இல்லை , அது-அது உங்களுடைய வயிறு, இல்லையா, நீங்கள் வயிற்றுக்கோளாறை கொண்டிருக்கிறீர்கள். இல்லையா? ஆம், சீமாட்டியே. உங்களால் சரியாக ஜீரணிக்க முடியாத ஆகாரங்களையும் காரியங்களையும் நான் - நான் காண்கிறேன். அது சரியா? அப்படி ஏதோவொன்று....?... வயிற்றில் தசைவலி, திடீரென்று அதிக குறைவாக உணர்ச்சிவசப்படுதல், புளிப்பாகுதல் மற்றும் உங்கள் பற்கள் கூச்சமுடையதாகவும் விடாத தலைவலியையும் காரியங்களையும் நீங்கள் கொண்டிருக்கவும் அது காரணமாயிற்று, அது சரியா? அது சரியே அது உண்மையா, சகோதரியே? இப்பொழுது பேசிக்கொண்டிருந்தது நானல்ல. அது பேசிக் கொண்டிருந்த வேறு ஏதோவொன்று. அது கர்த்தருடைய தூதன். நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் கீழ்படிவீர்களா? நீங்கள் சென்று நீங்கள் விரும்பும் எதையும் சாப்பிடுங்கள், உங்கள் வயிற்றுக்கோளாறு சரியாகி, போய் விட்டது. சகோதரியே, நீங்கள் இப்பொழுது குணமடைந்து விட்டீர்கள். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 49அவள் சுகமடைந்த அதே நேரம், மற்றொரு வயிற்றுக் கோளாறு அல்லது ஏதோவொன்று சரியாக இங்கு எங்கோ ஓரிடத்தில் அசைந்து கொண்டிருக்கிறதை நான் உணர்கிறேன். இப்பொழுது ஒரு நிமிடம். ஆவிகளாகிய அவைகள் ஒன்று மற்றொன்றுடன் இரக்கம் (sympathize) காட்டுகின்றன. அது சரியாக இந்த வழியில் இருக்கிறது. நான் அதைக் கூற முடியும். அந்த இரண்டும் குறுக்காக கடந்து சென்றதை என்னால் காண முடிகிறது. அங்கே எதோவொரு இடத்தில் குறுக்காக கடந்து சென்றது. இப்பொழுது, உண்மையாகவே ஒவ்வொருவரும் உத்தமமாய் இருங்கள். நான் அதை மீண்டும் காண்பது வரை அப்படியே உத்தமமாய் இருங்கள். அது என்னவாக இருந்தது, சகோதரியே? என் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.....?... நீங்கள் இந்த ஊழியக்காரர்களின் மனைவிகளில் ஒருவராக இருக்கிறீர்கள், இல்லையா? நான் அன்றொரு நாளில் உங்களை சந்தித்திருக்கிறேன், இல்லையா? அது சரி சரி, நீங்கள் அவளுக்காக விசுவாசித்துக் கொண்டிருந்தீர்கள். சகோதரியே, அது உன்னில் ஊறிக்கொண்டிருக்கும் உங்கள் விசுவாசமாக இருந்தது. அது சரியே. அது சரியே. 50சரி, சகோதரியே, நீங்கள் நீங்கள் இங்கே முன்னால் வாருங்கள். இப்பொழுது, ஒரு ஊழியக்காரரின் மனைவி அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், சகோதரியே, சகோதரர்களே, அது அவளுடைய விசுவாசமாக இருக்கிறது. நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? அது உங்களுடைய விசுவாசமாக இருக்கிறது. நீங்கள் என்னை விசுவாசியுங்கள். அப்படியே ஒரு தடவை விசுவாசியுங்கள். பாருங்கள். தேவன், “நான் ஒரு கிரியை செய்கிறேன். அது ஒரு மனிதன் மூலம் செய்யப்படுவதால், நீங்கள் விசுவாசிக்க மாட்டீர்கள்” என்று கூறினார் என்று ஒரு ஊழியக்காரர் அன்றொரு நாளில் கூட்டத்தில் சாட்சி கூறினார். பாருங்கள், அது நானல்ல என்று கூறுவதற்கு நான் முயற்சிக்கிறேன். உங்கள் விசுவாசமானது, அதை செய்ததாக இருக்கிறது. விசுவாசம் இல்லாமல், அங்கே எதுவுமில்லை ... உங்களால் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. ஜனங்கள் அவருடைய தலையில் கோலால் அடித்து, “தீர்க்கதரிசனம் சொல்” என்று கூறினர், அவர்களுக்கு நற்குணம் கிடையாது. பாருங்கள்? அது விசுவாசிப்பவர்களுக்குரியது. 51இப்பொழுது, நீங்கள் வியாதியஸ்தராய் இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் விரும்பினால், நீங்கள் சிறிது இந்த வழியாக வர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் சரியாக அங்கேயே நிற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். மேலும் நீங்கள் இடையூறின்றி நிற்க நான் விரும்புகின்றேன்.... நீங்கள் அப்படியே அமைதியாக இருங்கள். நான் அப்படியே உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்... அது அப்படியே சிறிது கடினமாக உள்ளது. பாருங்கள். நான் என்ன கருதுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுது நீங்கள்... நாம் அன்னியர்கள், இல்லையா? நான் அறிந்துள்ளபடி, உங்களை நான் கண்டதேயில்லை. நான் - நான் உங்களைக் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. நான் அப்படியே இந்த சமயத்தில் தான் இங்கே சந்தித்துக் கொள்கிறோம். இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் மிகவும் மென்மையானவராக இருக்கிறார், நீங்கள் அறிவீர்கள், மிகவும் மென்மையானவர். நான் முதலில் அவரிடம் தயவைப் பெற்றுக் கொண்டாக வேண்டும். இப்பொழுது, சகோதரர்களே, இங்கே என்னுடைய வலப்பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற நீங்கள், இப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா... உங்களால் பரிந்து கொள்ள முடிகிறதா... நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்ளுகிறீர்களா? இப்பொழுது, அது கர்த்தருடைய தூதன் என்னிடம் வந்து கொண்டிருப்பதாகும். 52ஆம், உங்கள் ஆரோக்கியம் அனேக நாட்களாக நன்றாக இல்லை, அப்படித்தானே, சகோதரியே? நிச்சயமாகவே, சிறிது முன்னர் கடந்து சென்ற ஸ்திரியைப் போன்று, நீங்களும் நரம்புக் கோளாறை உடையவர்களாயிருக்கிறீர்கள், மிக அதிகமான நரம்புக் கோளாறு. உங்கள் பார்வையும் நன்றாக இல்லை. உங்களுக்குக் கிட்டப்பார்வை உள்ளது இல்லையா, சகோதரியே? உங்களுடைய கண்பார்வை, உங்களால் மிக நன்றாக பார்க்க முடியவில்லை . நீங்கள் சில காலங்களாக அப்படி இருந்து வருகிறீர்கள், இல்லையா? மேலும் நீங்கள்... இப்பொழுது நான் அப்படியே... இந்த வழியாக பாருங்கள். எஜமான் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நீங்கள் நினைவு கூருகிறீர்களா? அவர் ஒரு சொந்த தொடர்பைக் கொண்டிருந்தார். அவர் தம்முடைய எல்லா சீஷர்களையும் அப்பால் அனுப்பிவிட்டார், கிணற்றண்டையில் ஒரு ஸ்திரி வந்தாள். அது சரியா? நீங்கள் அதை நினைவு கூருகிறீர்களா? ஆம். மேலும் அவர் அவளிடம் ஒரு வார்த்தையை சொன்னார், “போய், உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா” அவள், “எனக்கு புருஷனில்லை ” என்றாள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்லவென்று அவர் அவளிடம் கூறினார். அது சரியா? நீங்கள் ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக இருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடன் மிகவும் ஆழமாக நடக்கும்படி தேவனை தேடிக்கொண்டிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். ஆம், அங்கே அது இருக்கிறது. நீங்கள் மிக அதிகமாக வயிற்றுக்கோளாறைக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா? அது சரியே. வீட்டிற்கு செல்லுங்கள். என் அன்புள்ள சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார், மேலும் நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிக்கிறார். “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் கூறுவோம். ஒவ்வொருவரும், உண்மையாகவே உத்தமமாயிருங்கள். என்னே, நண்பர்களே, ஒரு மனிதனிடமிருந்து நான் எடுத்துள்ள அந்த ஜீவியத்தை நீங்கள் அறிவீர்கள். 53சரி, சகோதரியே, நேராய் வாருங்கள். எப்படியிருக்கிறீர்கள், சகோதரியே. நீங்கள் கண்ணாடி அணிந்திருப்பதை நிச்சயமாகவே என்னால் காணமுடிகிறது. அது.... நீங்கள் உங்கள் கண்களில் ஏதோவொரு கோளாறை கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் அப்படியே உங்களிடம் சிறிது பேச விரும்புகிறேன்........... உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன், சகோதரியே. ஆம், ஐயா. நீங்கள் நல்ல நேர்மையான ஸ்திரீயாக இருக்கிறீர்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் இந்த சமயத்தில் உணருவதைக் குறித்து நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?... அது தேவனுடைய ஆவியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா...?... நீங்கள்- நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? இது ஒரு பயபக்தியைப் போன்று இருக்கிறது, இல்லையா, சகோதரியே? நீங்கள் குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள், அனேக காரியங்கள் உங்களுடன் தவறாயுள்ளன. இது நிச்சயமாகவே உங்கள் முதுமையின் காரணமாக சம்பவித்திருக்கிறது. நீங்கள் நீண்ட காலமாக தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் வயதானவர் களுக்கு வரும் ஒரு கோளாறைக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் அதிகமாக வயிற்றுக்கோளாறையும் கொண்டிருக்கிறீர்கள்.